Header Ads



இலங்கை மண்ணில் பிறந்தவர்களை இங்கு அடக்கம்செய்ய, முடியாதென்றால் அது மிகப்பெரிய பிரச்சினை - தயாசிறி


கொரோனா வைரஸ் தொற்றால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்காக சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கை மண்ணில் பிறந்தவர்களை இறந்த பின்னர், இலங்கை மண்ணில் அடக்கம் செய்ய முடியாது என்றால், அது மிகப் பெரிய பிரச்சினை எனவும் அவர் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றால் இறப்பவர்களை தகனம் செய்வது தொடர்பாக ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமை தொடர்பிலான தனது நிலைப்பாடு குறித்து கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இஸ்லாமிய சமய நம்பிக்கைக்கு அமைய மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனஸாக்கல் நல்லடக்கம் செய்யப்பட வேண்டும்.

எனினும் இலங்கையில் கொரோனா தொற்றல் இறக்கும் முஸ்லிம்களின் உடல் தகனம் செய்யப்பட்டு வந்தன.

அண்மையில் பிறந்து 21 நாட்களே ஆன முஸ்லிம் தம்பதியின் குழந்தை கொரோனா தொற்றால் உயிரிழந்ததுடன் குழந்தையின் உடல் தகனம் செய்யப்பட்டது.

இந்த சம்பவம் முஸ்லிம் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலைமையை ஏற்படுத்தியது.

இதனையடுத்து முஸ்லிம்களின் ஜனஸாக்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

1 comment:

  1. முஸ்லீம் பா.உ கள் தமது நட்பு வட்டத்துக்குள் உள்ள பிற மத பா.உ களை இவ்வாறு பேசவைத்தால் வன்போக்காளர்கள் தனித்துப் போவதுடன் சாயமும் வெளுத்து விடும்.

    ReplyDelete

Powered by Blogger.