Header Ads



முஸ்லீம் சமூகம் மத நம்பிக்கைகளை, பின்பற்றுவதற்கான அனுமதியையே கோருகின்றது - நீதியமைச்சர் அலி சப்ரி


கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்கள் அனைவரையும் கட்டாயமாக தகனம் செய்யவேண்டும் என்ற கொள்கைளை அரசாங்கம் மறுசீரிலனை செய்யவேண்டும் என நிபுணர்கள் குழுவொன்று வேண்டுகோள் விடுத்துள்ளது என நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கையில் இதனை தெரிவித்துள்ள அவர் உடல்களை அகற்றுவது மிகவும் உணர்வுபூர்வமான விடயம் என தெரிவித்துள்ள நீதியமைச்சர் அலி சப்ரி எந்த சமூகத்திற்கும் அநீதி இழைக்காமல் தீர்வை காணவேண்டும் என தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின உடல்களை அடக்கம் செய்வதற்கும் தகனம் செய்வதற்கும் உலகின் 190 நாடுகள் அனுமதி வழங்கியுள்ளன என தெரிவித்துள்ள நீதியமைச்சர் மருத்துவநிபுணர்கள் குழுவொன்று உலகின் ஏனைய நாடுகள் போல இலங்கையிலும் உடல்களை தகனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படுமா என கேள்வி எழுப்பியுள்ளது என தெரிவித்துள்ளார்.

தாங்கள் நியாயமற்ற விதத்தில் நடத்தப்படுவதாக ஏதாவது ஒரு சமூகம் நினைத்தால் அனைத்து இலங்கையர்களையும் ஐக்கியப்படுத்தும் அரசாங்கத்தின் இலக்கிற்கு அது பாதிப்பை ஏற்படுத்தும் என நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

முஸ்லீம் சமூகம் தனது மதநம்பிக்கைகளை பி;ன்பற்றுவதற்கான அனுமதியையே கோருகின்றது என நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

4 comments:

  1. தட்டிக்கேட்க வந்தவர் தடவி விடுகிறார் .

    ReplyDelete
  2. நீதி அமைச்சரின் கோரிக்கைக்கு நீதி கிடைக்கவிடின், பாமர குடிமக்களில் குரலுக்கு எங்கு நீதி கிடைக்கும்?

    ReplyDelete
  3. நிபுணர்கள் குழுவினர் வன்போக்குள்ள சில அரசியல் வாதிகளினதும், மதகுருமார்களினதும் அச்சுறுத்தலுக்குட்பட்டு பதவிகளை காப்பாறிக்கொள்வதற்காக மானத்தை விற்றுப் பிழைப்பு நடத்துகின்றனர்.

    ReplyDelete
  4. நீதி அமைச்சரே!எதிர்பார்த்தும் இருந்திருக்க மாட்டிர்கள் நீங்கள் சொன்ன ஒரு சொல் உங்களையே குழப்பத்தில் ஆழ்த்தி குப்புற போடும் என்று "அம்பாணக்கி கிடைக்கும்"என்பதற்கு அர்த்தம் காலம் இவ்வளவு சீக்கிரம் உங்களுக்கு உணர வைக்கும் என்று நினைத்திருக்க மாட்டிர்கள் இதைத்தான் சொல்லுவார்கள் சொந்த செலவில் சூனியம் வைப்பதென்பது.

    ReplyDelete

Powered by Blogger.