Header Ads



தெஹிவளை குண்டுதாரியின் மனைவியான, சிபானா ஒமர் கத்தாப்பிடம் சாட்சியம் பதிவு


(எம்.எப்.எம்.பஸீர்)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தெஹிவளை ‘ட்ரொபிகல் இன்’ தங்கு விடுதியில் குண்டை வெடிக்கச் செய்த ஜமீல் மொஹம்மட் எனும் குண்டுதாரியின் மனைவியான பாத்திமா சிபானா ஒமர் கத்தாப்பிடம் இன்று (22) சாட்சியம் பதிவு செய்தது.

போகம்பறை சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவரிடம், ஸ்கைப் தொழில் நுட்பம் ஊடாக, ஆணைக்குழுவின் பொலிஸ் அதிகாரிகள் அருகிலிருந்த நிலையில் சாட்சியம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சாட்சிப் பதிவை அறிக்கையிட ஊடகங்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.

இதேவேளை, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வரை ஆணைக்குழுவின் பதவிக்காலத்தை நீடித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவினால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

1 comment:

  1. naasamaakittengale...naasakaarigala....naasamaapponga!!!!

    ReplyDelete

Powered by Blogger.