December 15, 2020

ACJU வின் தலைவருக்கு எமது மனமார்ந்த நன்றிகளும், மனதார துஆவும்...!!


- ஏ.எஸ்.எம் றஹ்மி - குருநாகல் -

கவலை வேண்டாம்  தலைவரே!! அல்லாஹ் உம்முடன் இருக்கின்றான். எமது ஆழ்மனதிலிருந்து ஊற்றெடுக்கும் துஆக்கள் உமக்குண்டு.

#உம்மால் இச்சமூகத்திற்கு நடந்த சேவைகள் ஏராளம் தாராளம்.அது பட்டப்பகல் சூரியனின் வெட்ட வெளிச்சத்தை போன்றது.அதை தனது உள்ளங்கையால் மறைக்கப்பார்கிறது ஓர் கோமாளிக்கூட்டம்.

தயக்கம் வேண்டாம் தலைவரே!!

#10/12/2020 அன்று நடந்த சாட்சியத்தின் போது சுமார் ஆறரை மணிநேரம் நின்ற வண்ணமே முஸ்லிம்களின் உரிமைக்காக குரல் கொடுத்ததை மெச்சிப் பேசாத ஒரு கூட்டம் யாரோ ஒருவன் சொன்ன வட்டிலப்பக்கதையை தூக்கிப் பிடித்து உமது பெயரை நாசப்படுத்த முயற்சிக்கிறது.அவர்களுக்கு  அல்லாஹ் போதுமானவன் நீங்கள் கலங்க வேண்டாம் தலைவரே!

# தமது சுய லாபத்திற்காக ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் அடமானம் வைக்கும் அரசியல்வாதிகள் கூட பேசத்தயங்கும் எத்தனையோ  தலைப்புகளில் பேச எக்கூலியையும் எதிர் பார்க்காமல் (அல்லாஹ்வின் திருப்தியை மட்டும் நாடி) தன்னந்தனியாக களமிரங்கியிறுக்கும் உங்களுக்கு   நிச்சயம் அல்லாஹ்வின் உதவியுண்டு.

# உத்தியோகப்பூர்வ ஊடகங்களில் பேசக் கிடைக்காத, சமூகம் ஓரங்கட்டிய வெளிநாடுகளில் உள்ள  சிலர் (பேசிக்கொள்ள இடம் கிடைகாத ஆத்திரத்தில்) தமது வீரத்தை முகநூல்,வாட்ஸப்.. போன்ற சமூகவலைத்தளங்களில் காட்டித் திரிவது உமக்கு எந்த பாதிப்பையும் உண்டுபண்ணப்போவதில்லை.

نبح الكلاب لا يضر للسحاب

நாய் குரைப்பது வானத்துக்கு எந்த தீங்கையும் உண்டாக்காது. 

# யாரோ ஒரு ஸஹ்ரான் செய்த மிலேச்சத்தனமான செயலின் பின்விளைவாக முழு முஸ்லிம்களையும் தீவிரவாதிகளாக சித்தரிக்க எத்தனிக்கும் கூட்டத்திற்கு எதிராக  விடாப்பிடியாக ஜனநாயக ரீதியில் உரிமைகளை வெண்றெடுக்க உமக்கு என்ன தேவையிறுக்கின்றது??! அவ்வாறிருந்தும் முயற்சிக்கின்றீர், உமதுமுயற்சியினூடாக எத்தனையோ இயக்கங்களையும் பாதுகாத்தீர், இவைகளை மறந்து உம்மை விமர்சிப்பதானது வெறும் பொறாமையும், காற்புனற்ச்சியுமேயன்றி வேறில்லை.

# மார்க்கத்தை கற்றரிந்த ஆலிம் என்று கூட பாராமல் வாய்க்கு வந்த வார்த்தைகளால் வசைபாடும் விசமிகளை ஏறெடுத்தும் பார்க்காமல் தன் பாதையில் வீரநடை போடும் நீங்கள் நிதானம், சகிப்புத் தன்மை,விட்டுக்கொடுப்பு, போன்ற தன்மைகளைக் கொண்டு மக்கள் மனதை வெள்ளும் ஆளுமைக் கொண்டவர் என்பது புரிகிறது. பலரால் கைப்பற்றப்பட விருந்த ஜம்இய்யாவின் தலைமைத்துவம் உங்களின் பக்கமே பலதடவை மீண்டு வருவதற்கு இந்த தன்மைகளும் காரணமாக இருக்கலாம்.

# உம்மைப்பற்றிய ஒரு விடயம் சமூவலைத்தளங்களில் பகிரப்படும் போது அதை தீர விசாரித்து அதன் உண்மைத் தன்மையை அறியாமல் (குறைந்த பட்சம் சம்பந்தப்பட்வர்களை யாவது அணுகாமல்) ஒருவர் மற்றவரை முந்திக்கொண்டு மீடியாக்களில் பகிர்வதே இவர்கள் நுனிப்புல் மேய்ப்பவர்கள்,நிதானமற்றவர்கள்,பொய்யர்கள் என்பதற்கு போதுமானது.

 كفا بالمرء كذبا أن يحدث بكل ما سمع(الحديث)

மனிதன் தான் கேட்பவற்றையெல்லாம் (தீர விசாரிக்காமல்)சொல்வது அவன் பொய்யன் என்பதற்கு போதுமானது.

இதனையே ஹனபி மத்ஹபின் பிரபல அறிஞர் முஹம்மத் இப்னுல் ஹஸன் அஷ்ஷைபானி (ரஹ்) அவர்கள் கூறினார்கள் 

"لا تحكموا علينا حتى تسمعوا منا" 

 எம்மைப்பற்றிய ஒரு செய்தி உங்கள் காதுகளைத் தொடும் போது (நடந்தது என்ன என்பதை) நம்மிடம் கேட்டு விசாரிக்கும் வரை எமக்கெதிராக தீர்ப்பளிக்க வேண்டாம். 

#புறம் பேசுதல்,கோல்,அவதூறு,இட்டுக்கட்டுதல்,அபாண்டம்,மானபங்கப் படுத்தல், போன்ற பாவங்கள் ஊடகங்களில் மாத்திரம் அனுமதிக்கப்பட்டதோ என்று எண்ணுமளவு சிலரின் செயற்பாடுகளை நாம் பார்கின்றோம்.உங்களை ஊடகங்களில்  சீரலித்தவர்களை நீங்கள் மன்னிக்காதவரை அல்லாஹ் அவர்களை மன்னிக்க மாட்டான் என்பது நிச்சயம். 

#இறுதியாக 

 ரிஸ்வி  முப்தி சாப் அவர்களே!!! 

நான் ஒரு பொது மகன் என்னைப் போன்று எத்தனையோ பொது மக்கள் உங்கள் சேவை,துணிவு,சமூக அக்கரை,விடாமுயற்சி, போன்ற தன்மைகளைக் கண்டு உங்களுக்கு மனதார துஆ செய்கிறார்கள். இவர்களின் விமர்சனங்களைக் கண்டு பயப்பட வேண்டாம். பழம் உள்ள மரத்துக்குத் தான் கல்லும் பொல்லும் என்பது முதுமொழி.

இவையொன்றும் இவ்வுலகிற்கு புதிதல்ல நபி(ஸல்) அவர்களுக்கு வராத விமர்சனங்களும்,வசைப்பாடல்களும்,ஏச்சிப்பேச்சிகளுமா உங்களுக்கு?!!!

இஹ்லாஸுடன் செயற்படுங்கள்.அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவான் !

⚜️ فلا يحزنك قولهم إنا نعلم ما يسرّون وما يعلنون (سورة يس ٧٦ ) 

  எனவே நபியே! அவர்களின் பேச்சு உம்மைக் கவலை கொள்ளச் செய்ய வேண்டாம். அவர்கள்  மறைத்துக்  கொண்டிருப்பவற்றையும் பகிரங்கப்படுத்துபவற்றையும் நாம் நன்கறிவோம்.

நாம் பிறப்பதற்கு முன்னிருந்தே இந்நாட்டில் ஊண்டுதல் பிடித்து அதனூடாக மக்களை நெறிப்படுத்தி வழிகாட்டி வந்த அ.இ.ஜ.உலமாவை விமர்சித்து 

உலமாக்களையும் புத்திஜீவிகளையும் பிரித்து ஜம்இய்யா வின் தலைமைத்துவத்தை தகர்க முயற்சிக்கும் முனாபிக்கள், கோடாரிக் காம்புளின் சூழ்ச்சிகளை விட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவோம்.

7 கருத்துரைகள்:

அல்ஹம்துலில்லாஹ் நல்ல தோர் பதிவு

But they must have some skills and experience in dealing with non Muslims.
I think 2m Sri Lankan Muslim community must learn arts of living in a non Muslims society like that of Sri Lanka..
What is this Islamic group fighting .
TJ Vs JI
JI VS Salafi.
Salafi VS Tariqa.
Tariqa VS all other groups .
Allah called us as Muslims ..
هو سماكم المسلمين ..
Not like all these groups divide our Muslim community..
SO; if non Muslims do not accept Islamic message these groups will be responsible on the day of Qiyama.

சிறு கூட்டம் கொக் கரி க் கட்டும்
முஃப்தி அவர்களே உங்களை
99% மக்கள்தொகை பின் தொடர் கி ரா ர் கள் துஆ செய்கிரார்கள்.வல்லவன் அல்லாஹ்வின் துனை என்ரும்
கிட்டும் இன்ஷா அல்லாஹ் நிச்சி
யம் வெற்றிகளும் கிட்டும்
ஆகிரத்தில் மேலான கூலியும்
கிடைக்கும் மதியீனர்களை
புறம் தள்லி பயணத்தை தொடருங்கள்

ALLAH KNEW EVERYTHING,
OH ALLAH IF HE USE YOUR RELEGION FOR HIS PERSONNEL AGENDA /MISS USE, PUNISH HIM INFRONT OUR FACE VERY SOON, IF HE USE FOR GOOD GIVE HIM HEALTH AND WEALTH

Post a comment