Header Ads



உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை வைப்பதற்கு, 5 இடங்களில் குளிரூட்டப்பட்ட கொள்கலன்கள்


கொரோனாவினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை குளிரூட்டப்பட்ட கொள்கலன்களில் வைப்பது குறித்த யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்த்தன ஆங்கில இணையத்தளமொன்றிற்கு இதனை தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றிற்குள்ளானவர்களின் உடல்களை நீண்டகாலம் ஏனையவர்களின் உடல்களுடன் பிரேதஅறையில் வைத்திருக்க முடியாது என்பதாலேயே இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இறுதிசடங்குகள் முடிவடையும் வரை கொரோனாவினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை குளிரூட்டப்பட்ட கொள்கலனில் வைத்திருப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐந்து இடங்களில் இவ்வாறான குளிரூட்டப்பட்ட கொள்கலன்களை பயன்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் நீர்கொழும்பு கண்டி கிழக்கு மாகாணம் மற்றும் கொழும்பில் குளிரூட்டப்பட்ட கொள்கலன்களை பயன்படுத்தலாம் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.


3 comments:

  1. சேர்த்துவைத்து மாலைதிவு அனுப்பலாம்

    ReplyDelete
  2. So logically, which will be safe, Buried or keeping like this outside???
    clearly showing you all are......... shame on you

    ReplyDelete

Powered by Blogger.