Header Ads



இலங்கையில் 4 கொரோனா தடுப்பு, மருந்துகளை பயன்படுத்துவதற்கு அனுமதி


கொரோனா வைரசினை கட்டுப்படுத்தக்கூடிய நான்கு மருந்துகளுக்கு தேசிய ஆராய்ச்சி பேரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஒக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தின் அஸ்டிராஜெனேகா, மொடேர்னா, பைசர் பயோன்டெக் ஆகியவற்றின் மருந்துகளுக்கும் ரஸ்யாவின் ஸ்புட்னிக் ஆகியவற்றிற்கே இலங்கையின் தேசிய ஆராய்ச்சி பேரவை அனுமதி வழங்கியுள்ளது.

நான்கு மருந்துகளும் இலங்கையில் பயன்படுத்துவதற்கு பொருத்தமானவை என தேசிய ஆராய்ச்சி பேரவையின் தலைவர் ஹெமந்த டொடாம்பஹல தெரிவித்துள்ளார்.

இந்த நான்கு மருந்துகளில் இலங்கைக்கு பொருத்தமான மருந்தினை பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு சுகாதார அமைச்சினை கேட்டுக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்த ஆவணங்களை சுகாதார அமைச்சிடமும கொவிட் 19 தொடர்பான இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளேயிடமும வழங்கிவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மார்ச்மாதமளவில் மருந்துகளை பெறுவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. very care ful

    when men take this madicine ,their voice going to change as ladies voice


    when women take this madicine , their face going to grow beard

    very carefull, some time included pig some hormon

    ReplyDelete

Powered by Blogger.