Header Ads



சீனாவிலிருந்து 48 கொள்கலன்களில் வந்த, ரின் மீன்கள் திருப்பி அனுப்பப்பட்டன


 (க.பிரசன்னா)

சீனாவிலிருந்து 48 கொள்கலன்களில் இறக்குமதி செய்யப்பட்ட ரின் மீன்களை மீண்டும் திருப்பி அனுப்புவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை கட்டளைகள் நிறுவனத்தினால் நிராகரிக்கப்பட்டதனையடுத்தே இவை திருப்பி அனுப்பப்படவுள்ளன.       

இறக்குமதி செய்யப்பட்ட ரின் மீன்களின் நிராகரிக்கப்பட்ட இருப்புக்களைக் கொண்ட முதல் இரண்டு கொள்கலன்கள் இன்று மாலை 04.00 மணிக்கு அனுப்பப்படவுள்ளதாக இலங்கை சுங்க ஊடக செய்தித் தொடர்பாளர் சுனில் ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்பட்ட ரின் மீன்கள் இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் எஸ்.எல்.எஸ். 591 2014 தரச் சான்றிதழுடன் இணங்காமையினால் குறித்த ரின் மீன்கள் நிராகரிக்கப்பட்டுளள்ன.

No comments

Powered by Blogger.