December 13, 2020

ஆக்கிரமிப்பு பேரரசுகளின் மயான பூமி ஆப்கானிஸ்தான், சோவியத் ஆக்கிரமிப்பு முடிவுற்று 40 ஆண்டுகள்


- லத்தீப் பாரூக் -

சுமார் 2300 வருடங்களுக்கு முன் மசடோனியா ஆட்சியாளர் பேரரசர் அலக்ஸாண்டர் (அலக்ஸாண்டர் த கிரேட்) மசடோனியாவில் இருந்து எகிப்து வரையிலும் மறுபுறத்தில் கிரேக்கத்தில் இருந்து இந்தியாவின் ஒரு பகுதி வரைக்கும் அகண்டு விரிந்த ஒரு பேரரசை உருவாக்கியவர். அவர் ஒரு முறை கூறினார் 'ஆப்கானிஸ்தான் எப்படிப்பட்ட ஒரு நாடு எனில் அங்கே நீங்கள் பிரவேசித்து விடலாம் ஆனால் அதன் பிறகு வெளியே வரவே முடியாது' என்று.

ஆப்கானிஸ்தான் இன்று வரை அதை உலகுக்கு நிருபித்துள்ளது.

முன்னாள் ரஷ்யத் தலைவர் லியோனிட் பிரஷ்நேவ் மதுபோதையில் இருந்த நிலையில் 1979 டிசம்பரில் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிக்குமாறு உத்தரவிட்டார். அதன் பிறகு பர்பராக் கர்மால் என்பவரின் தலைமையில் அங்கு கம்யூனிஸ அரசையும் நிறுவினார்.

ஆனால் ரஷ்ய ஆக்கிரமிப்பை தொடர்ந்து எதிர்ததுப் போராடிய ஆப்கானிஸ்தான் மக்கள் 1989ல் தமது நாட்டை ஆக்கிரமித்தவர்களை அங்கிருந்து விரட்டி அடித்ததோடு சோவியத் யூனியனுக்கும் முடிவு கட்டினர்.

மொஸ்கோவின் கொடூரமான இராணுவத் தாக்குதல்களில் ஆப்கானிஸ்தானின் ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் என பாரபட்சம் இன்றி கொன்று குவிக்கப்பட்டனர். மிக ஆழமான சமய உணர்வுகளைக் கொண்டிருந்த அந்த நாட்டின் சமூகக் கட்டமைப்பு முற்றாக நாசமாக்கப்பட்டது.

ரஷ்யாவின் ஆக்கிரமிப்பின் போது அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளும் சவூதி அரேபியாவும் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு உதவிகளை வழங்கின. இவ்வாறு அது சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான யுத்தமான மாறியது. ஆனால் யுத்தகளத்தில் ஆப்கானிஸ்தான் மக்கள் தங்களைத் தாங்களே கொன்று குவித்தனர்.

ஒருவாறு சோவியத் அங்கிருந்து வெளியேறிய பிறகு செப்டம்பர் 11 உலக வர்த்தக நிலையம் மீதான தாக்குதல் மற்றும் பெண்டகன் மீதான தாக்குதல் என்பன இடம்பெற்றன. ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிப்பதற்காக தாங்கள் வகுத்து வைத்திருந்து இரகசிய திட்டத்தின் அமுலாக்கத்தை நியாயப்படுத்த அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தான் இந்தத் தாக்குதலை நடத்தின என்பது இப்போது பல்வேறு தரப்பினராலும் நம்பப்படுகின்ற ஒரு விடயமாகும். ஆப்கானிஸ்தான் மக்களோ இப்போது மீண்டும் அமெரிக்காவை எதிர்த்துப் போராடத் தொடங்கினர். அதன் விளைவு தான் ஆப்கானிஸ்தானை விட்டு விட்டு அமெரிக்கப் படைகள் இப்போது ஓட்டம் பிடிக்க வேண்டிய நிர்ப்பந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

ஏவ்வாறேனும் சோவியத் யூனியனும் அமெரிக்காவும் ஆப்கானிஸ்தான் மக்களைக் கொன்று குவித்து அவர்களது உன்னதமான தனித்துவமான அரசியல் ஒழுங்கு முறையை சிதைத்து அவர்களது உள்கட்டமைப்பை சீர்குலைத்து பொருளாதாரத்தையும் நாசப்படுத்தியது. ஆப்கானிஸ்தான் சமூகத்தை சீரழித்து சின்னாபின்னமாக்கும் தமது செயற்பாட்டில் நூற்றுக்கணக்கான கிராமங்களும் நகர்பு;புற குடியிருப்புக்களும் நகரங்களும் புறநகர் பகுதிகளும் அழிக்கப்பட்டன. மொத்தத்தில் ஆப்கானிஸ்தான நகரங்கள்; சிதைவடைந்த நகரங்களாக மாற்றப்பட்டன.

அண்டை நாடுகளான பாகிஸ்தானிலும் ஈரானிலும் மிக மோசமான நிலைமைகளின் கீழ் இலட்சக்கணக்கான அப்கானிஸ்தான் மக்கள் அகதிகளாகத் தஞ்சம் புகுந்தனர். சுமார் ஐம்பது லட்சம் பேர் இவ்வாறு அகதி வாழ்க்கை வாழ்ந்து வருவதாக தெரியவந்துள்ளது.

கடந்த நாற்பது வருட காலமாக அந்த மக்கள் மீது அலட்சியம் காட்டப்பட்டு வந்தது. அவர்கள் புறக்கணிக்கப்பட்டனர், தனிமைப்படுத்தப்பட்டனர், சமூக ரீதியாக மட்டந் தட்டப்பட்டனர். பாரம்பரியமும் சமூக பண்பாடும் தழைத்தோங்கிய அந்த நாடு வெறும் சாம்பல் மேடாக மாற்றப்பட்டது.

2020ம் ஆண்டு அக்டோபரில் அங்கிருந்து மிக மோசமான தகவல்கள் வெளிவந்தன. அதுதான் ஆப்கானிஸ்தானில் அவுஸ்திரேலிய விஷேட படைப்பிரிவினர் நடத்திய மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றங்கள் பற்றிய தகவல்கள். யுத்தத்தால் பாதிக்கப்ட்ட தமது வாழ்வாதாரங்களை சமூக விழுமியங்களைத் தொலைத்து விட்ட அப்பாவி மக்கள் மீது அவுஸ்திரேலிய படைகள் அழிச்சாட்டியம் புரிந்துள்ளன என்ற உண்மைத் தகவல்கள் வெளியாகி உலகை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளன. இவ்வளவு காலமும் இந்த உண்மைகளையும் சான்றுகளையும் மறைத்து வைத்திருந்தமையே மாபெரும் குற்றமாகும்.

அவுஸ்திரேலிய விஷேட அதிரடிப் படையினர் ஆப்கானிஸ்தான் கிராமங்களைத் தாக்கிய போது அங்கு அச்சத்தையும் மரண பீதியையும் உருவாக்கினர். அங்கிருந்த ஆண்களையும் பெண்களையும் சிறுவர்களையும் பிடித்துச் சென்று அவர்களைக் கட்டி வைத்து சித்திரவதை செய்தனர். அதன் பிறகு படையினர் அங்கிருந்து விலகிச் சென்ற பின் அந்த இடத்தில் அவர்களால் அழைத்துச் செல்லப்பட்டவர்களின் சடலங்களைத் தான் காண முடிந்தது. அவர்களுள் சிலர் தலையில் சுடப்பட்டிருந்தனர். இன்னும் சிலரின் தலை துண்டிக்கப்பட்டிருந்தது. பெரும்பாலானவர்களின் கண்கள் கட்டப்பட்டிருந்தன, சிலரின் கழுத்துப் பகுதியில் தொண்டைக்குழி பிளக்கப்பட்டிருந்தது. வியட்நாம் யுத்தத்தின் போது அமெரிக்கப் படைகள் மேற்கொண்ட மைலாய் படுகொலைகளுக்கு ஒப்பானதாகவும் அமெரிக்கப் படைகளால் மிக மோசமாக நடத்தப்பட்ட ஈராக்கின் அபு குரைப் வதைமுகாம் சம்பங்களுக்கு ஒப்பானதாகவும் இவை அமைந்திருந்தன. 'எவ்வளவுதான் நாங்கள் மோசமாக நடந்து கொண்டாலும் அமெரிக்கர்களும் பிரிட்டிஷ் காரர்களும் எங்களைவிட மிக மிக மோசமானவர்கள். ஏங்களது இளம் படை வீரர்களின் கண் எதிரே இந்தச் சம்பவங்கள் இடம்பெற்றன. அவர்கள் இதில் ஈடுபட்டவர்களை கதாநாயகர்களாகப் பார்த்தனர். அமெரிக்கர்கள் எவ்வாறு மக்களை அச்சத்துக்கு உள்ளாக்ககின்றார்கள் என்பதைப் பார்த்து அவர்கள் வியந்து போய் நின்றனர்' என்று ஒரு அவுஸ்திரேலிய உளவாளி சாட்சியம் அளித்துள்ளார்.

இவ்வளவு அநியாயங்கள் நடந்த பிறகும் கூட 'அவர்களால் ஒரு மலரை கொய்து எரிய முடியுமே தவிர, வசந்த காலம் வருவதை அவர்களால் ஒரு போதும் தடுக்க முடியாது' என்று ஆப்கானிஸ்தானின் மிகவும் இளவயது பாராளுமன்ற உறுப்பினரான மலாலாய் ஜோயா தான் எழுதியுள்ள (சுயளைiபெ அல எழiஉந—எனது குரலை உயர்த்துகிறேன); என்ற நூலில் தனது மக்கள் குறித்த நம்பிக்கையை வெளியிட்டுள்ளார். (முற்றும்)

2 கருத்துரைகள்:

பதிவுகள் தந்தைமைக்கு நன்றிகள்

Post a comment