Header Ads



திருமண நிகழ்வுகளால் கொரோன ஆபத்து அதிகம் - 2 வருடங்களிற்கு கொரோனாவுடன் வாழவேண்டிய நிலையேற்படலாம்


மக்கள் ஒன்றாக அமர்ந்து உணவுண்ணும் சந்தர்ப்பத்திலேயே கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

மக்கள் ஒன்றாக அமர்ந்து உணவுண்ணும் தருணங்களில் கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பு அதிகம் என குறிப்பிட்டுள்ள அவர் திருமணநிகழ்வுகளில் இந்தஆபத்து அதிகம் என குறிப்பிட்டுள்ளார்.

திருமணநிகழ்வுகளில் கலந்துகொள்பவர்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றுவதில்லை – அவர்கள் கொரோனா பரவலை பாரதூரமான விடயமாக கருதவில்லை,மேலும் அவர்கள் பெருமளவில் ஒன்றுகூடும் இடங்களில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவதை அலட்சியம் செய்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

திருமணநிகழ்வுகளில் கலந்துகொள்வதற்கு அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எண்ணிக்கை இங்கு முக்கியமில்லை சுகாதார விதிமுறைகளை பின்பற்றுவதே அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த இரண்டு வருடங்களிற்கு நாங்கள் கொரோனாவுடன் வாழவேண்டிய நிலையேற்படலாம் என தெரிவித்துள்ள சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்த்தன கொரோனா வைரசிஸ் ஆபத்திலிருதுந்து விடுபடவேண்டுமென்றால் சூழலை மாற்றுவதும் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவதும் அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.