Header Ads



அலுமினியம், வெண்கலத்தால் ஆன புதிய 20 ரூபா நினைவு நாணயம் ஜனாதிபதிக்கு வழங்கிவைப்பு - இது புழக்கத்திற்கு விடப்படமாட்டாது


இலங்கை மத்திய வங்கிக்கு 70 வது ஆண்டுகள் நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட புதிய 20 ரூபாய் நினைவு நாணயம் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பேராசிரியர் டபிள்யூ.டி. லக்ஷ்மன் அவர்களினால் இன்று (31) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நாணயம் 7 பக்க வடிவத்துடன் அலுமினியம் மற்றும் வெண்கலத்தால் ஆனது. 3,000 நாணயங்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ள நிலையில் இது புழக்கத்திற்கு விடப்படமாட்டாது.

மத்திய வங்கி தலைமையகம் மற்றும் மாவட்ட கிளைகளினால் நாணயம் ரூ .1300 க்கு விற்பனை செய்யப்படும்.

ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் மத்திய வங்கி அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.


ஜனாதிபதி ஊடகப் பிரிவு

2020.12.31

No comments

Powered by Blogger.