Header Ads



2021 ஆம் வருடம் மனிதாபிமான, பேரழிவு ஆண்டாக காணப்படும் – உலக உணவு திட்டம்


2021 மனிதாபிமான பேரழிவு ஆண்டாக காணப்படப்போகின்றது என உலக உணவுதிட்டம் எச்சரித்துள்ளது.

இந்த தருணத்தில் காணப்படும் விடயங்களை வைத்து பார்க்கும்போது 2021 மனிதாபிமான பேரழிவாக காணப்படப்போகின்றது என உலக உணவுதிட்டத்தின் தலைவர் டேவிட் பீஸ்லே தெரிவித்துள்ளார்.

பல நாடுகளின் கதவை பஞ்சம் தட்டுகின்றது என அவர் குறிப்பிட்;டுள்ளார்.

ஐநா ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் உலகம் 2021 இல் மிகமோசமான மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொள்ளநேரிடாலம் என உலக உணவுதிட்டத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

எங்களால் அனைத்திற்கும் நிதி வழங்க முடியாது இதன் காரணமாக நாங்கள் முன்னுரிமைக்குரிய விடயங்களை தீர்மானிக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்

இதேவேளை கொரோனா வைரஸ் மருந்திற்காக செல்வந்தவர்களும் வலுவானவர்களும் ஏழைகளை மிதிக்கின்ற உலகத்தை எங்களால் அனுமதிக்க முடியாது என உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இது சர்வதேச நெருக்கடி இதற்கான தீர்வுகள் சமமாகவும் உலகத்தின் நன்மைக்காகவும் பகிரப்படவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. ஐ. நா. Too late.

    மனித உரிமை பேரழிவு இலங்கையில் 2020

    ReplyDelete

Powered by Blogger.