Header Ads



இலங்கையில் கொரோனா மரணங்கள் தொடர்பில், வெளியாகியுள்ள புதிய தகவல்கள் - கொழும்பில் 117 மரணங்கள்


நாட்டில் இதுவரை 160 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ள நிலையில் அதில் 117 மரணங்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளமை சிறப்பம்சமாகும். 

இந்நாட்டில் இடம்பெற்ற கொரோனா மரணங்களில் ​04 பேர் 30 வயதுக்கும் கீழ்ப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. 

31 முதல் 40 வயதுக்கு இடைப்பட்ட 4 பேரும், 41 முதல் 50 வயதுக்கு இடைப்பட்ட 20 பேரும் 51 முதல் 60 வயதுக்கு இடைப்பட்ட 28 பேரும் உயிரிழந்துள்ளனர். 

வயது 61 முதல் 70 க்கு இடைப்பட்ட 32 பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மேலும், 70 வயதுக்கும் அதிகமான 70 பேர் உயிரிழந்துள்ளமை விசேடம்சமாகும். 

கொவிட் மரணங்கள் ஏனைய மாவட்டங்கள் 

கம்பஹா - 15

களுத்துறை- 11

புத்தளம் - 05 

குருணாகலை - 04

மாத்தறை- 02

மாத்தளை -01

கண்டி -01

நுவரெலியா -01 

மேலும் வசிப்பிடம் அடையாளம் காணப்படாத மரணம் ஒன்றும் சிறைச்சாலை மரணங்கள் இரண்டும் பதிவாகியுள்ளன. 

இந்நாட்டில் இடம்பெற்ற 160 கொரோனா மரணங்களில் 98 மரணங்கள் வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளன. 

வீட்டில் மற்றும் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்படும் போது உயிரிழந்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 62 ஆகும்.

1 comment:

  1. கோரோனா என்ற வைரஸால் வந்த மரணமா? இல்லை, செத்த மனிதனுக்கு PCR செய்து வந்த கொரோனா மரணமா?

    ReplyDelete

Powered by Blogger.