Header Ads



பலகத்துறையில் இருந்து உதயமாகியுள்ள TLWA - முற்றிலும் இலவச சேவை (முழு விபரம் இணைப்பு)

இந்த Tree Life Welfare Association அமைப்பானது  பலகத்துறை மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களான நீர்கொழும்பு, கொட்டார முல்லை, தும்மோதர, மாதம்பை போன்ற ஊர்களிலும்  பின்வரும் சேவைகளை நடாத்த திட்டமிட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

1. சாதாரண வாகனங்களில் எடுத்துச் செல்ல முடியாத சீரியசான, அவசர நோயாளர்களை வைத்தியசாலைகளுக்கு அழைத்து செல்லல்.

2. பலகத்துறை மற்றும் அண்மிய பிரதேசங்களின் ஜனாஸாக்களை உரிய இடங்களுக்கு எடுத்துச் செல்லல்.

 3. ஜனாஸாவின் கடமைகளை பூர்த்தி செய்வதற்கு தேவையான கபன் துணி, பலகை செட் மற்றும் அடக்கம் செய்ய தேவையான உபகரணங்களை வழங்குதல்.

4. ஜனாஸா கடமைகள் முழுமையாக நிறைவேறு மட்டும் ஜனாஸா வீட்டுக்கு தேவையான கூடாரம், கதிரைகள் உற்பட அணைத்து பொருட்களும்  வழங்கப்படும்.( இலவசம்)

5. நடக்க  நடமாட  முடியாத  நோயாளிகளுக்கு அவர்களின் நோய் குணமாகும் வரை, பாவிப்பதற்கு தேவையான சக்கர நாற்காலி, (Wheel Chair), ஊன்று கோல்கள் போன்ற உபகரணங்களையும் தேவைக்குரிய காலம் வரை பாவனைக்கு வழங்கல்.

மற்றும் கடந்த காலங்களில் உலர் உணவு விநியோகம், கடனாளிகளுக்கான  உதவிகள் போன்ற சேவைகளையும் செய்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்னும் பல சேவைகளையும் இலவசமாக பெற்றுக்கொள்ள,   உங்களுக்கு தேவையான சேவைகளைப் பெற அழையுங்கள்

ஜனாஸா அல்லது நோயாளியை எடுத்துச் செல்ல வாகனத்துக்கு:-

சகோதரர் - பாயிஸீன்  0770577867 

ஏனைய தேவைகளுக்கு:-

சகோதரர் பைரூஸ்  077 788 8843

சகோதரர் பாயிஸ்  077 603 8024

சகோதரர் ருஷ்தீன்  077 317 1718

 சகோதரர் அஸ்லம்  077 354 3654

அஷ்ஷெய்க் ஹிஷாம் 075 802 4306

அஷ்ஷெய்க் பெளமி 0771386255

குறிப்பு

எமது சேவை முற்றிலும் இலவசமானதே.

 எமது ஊரின் முக்கியத் தேவை மற்றும் நோயுற்றவர்கள், விஷேட தேவையுடையவர்கள். (அங்கவீணர்கள்) போன்றவர்களுக்கு எம்மால் முடிந்த உதவிகளைச் செய்யக்காத்திருக்கிறோம். இன்ஷா அல்லாஹ் அந்த மகத்தான சேவைக்கு அல்லாஹ்வுக்காக பங்களிப்புச் செய்யவோ. நன்கொடை/ சதகாக்களை வழங்கவோ விரும்புபவர்களும் மேலே உள்ள தொலைபேசி இலக்கங்களோடு தொடர்பு கொள்ளலாம்.

ஜஸாக்கல்லாஹு ஹைர் 




3 comments:

  1. Masha Allah,

    May Allah bless the organizers....

    ReplyDelete
  2. முன்மாதிரிமாக்க இணையதளமாகவும் முஸ்லீம் சமூகத்தின் குரலாகவும் பல தகவல்களையும் உண்மையுடன் அறியத்தரும் செய்தித்தளம் என்பதில் சந்தேகமில்லை.

    ReplyDelete
  3. மாஷாஅல்லாஹ்! இந்த மகத்தான சேவையில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் அல்லாஹ் அருள் புரிவாயாக!

    ReplyDelete

Powered by Blogger.