Header Ads



கொழும்பில் உயிரிழப்புகள் அதிகரிக்கின்றன, நோயாளர் எண்ணிக்கையும் அதிகரிக்கின்றது - PHI

கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த முடியாத நிலையில் காணப்படுகின்றது என பொது சுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து அதிகளவு நோயாளிகள் இனம் காணப்படுகின்றனர் என பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் பாலசூரிய தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாநகர சபையின் ஏனைய பகுதிகளில் இருந்தும் கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்படுகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

நோயாளி அடையாளம் காணப்பட்டால் அவரை மருத்துவமனையில் அனுமதிப்பதற்கும்,நெருங்கிய தொடர்பிலிருந்தவர்களை அடையாளம் காண்பதற்குமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்,பிசிஆர் சோதனைகளை மேற்கொள்ளவேண்டும், அவர்களை உடனடியாக தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக இலங்கை தற்போது அதிகளவு உயிரிழப்புகளை சந்திக்கின்றது என குறிப்பிட்டுள்ள அவர் கொழும்பு துறைமுக பகுதி பொரளை மோதர பகுதிகளிலேயே அதிகளவானவர்கள் மரணிக்கின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் கொழும்பு மாநகர சபை பகுதிக்குள் உயிரிழப்பும் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது என பாலசூரிய தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.