Header Ads



மலையக மக்களுக்கு மீண்டும் ஓருமுறை, சுவிங்கம் தந்திருக்கிறார்கள் - வேலுகுமார் Mp


இன்று (20.11.2020) எதிர்கட்சித்தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்த கருத்துக்களின் சுருக்கம்.

2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை பார்க்கும் போது    அது ஒரு மாபியாவுக்கு ஒப்பான வரவு செலவுத்திட்டமாகும்.கருப்புப்பணத்தை முறையான பணமாக மாற்றுவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கு ஒப்பான விதமா யோசனைத்திட்டம் அமையப் பெற்றுள்ளது.இதற்கு பின்னால் மறைமுகமாக இருப்பவர்கள் யார் என்று நாங்கள் கேட்க விரும்புகிறோம். 

இந்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சில அமைச்சர்கள் மற்றும் அரசாங்கத்துடன் தொடர்புடைய வியாபாரிகளுக்கு வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் பணங்களை மறைத்து வைத்திருப்பதாக குற்றச் சாட்டு கூறப்பட்டது.அவ்வாறு மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கருப்புப்பணங்களை வெளிக்கொனர்வதற்கான யோசனையே 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம்.கொவிட் 19 தொற்றால் நாடு மிக மோசமாக பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இத்தருனத்தில் கொவிட் பிரச்சிணையை புறம் தள்ளி, மறந்து  கறுப்புப்பணத்தை வெளிக்கொனரும் விதமான மாபியாவாக 2021 வரவு செலவுத்திட்டம் அமைந்துள்ளது.கறுப்புப்பணம் யாரின் கைகளிலுல்லது என எங்களுக்கு தெரியும், போதைப் பொருள் விற்பனைக்காரர்களிடம்,கொலையாலிகளின் கைகளில் அதே போல் சட்ட விரோத வியாபரத்தில் ஈடுபடுபவர்களிடம் தான் இது இருக்கிறது.சாதாரன குடி மக்களின் சாதாரன வியாபாரிகளின் கைகளில் இந்தக் கறுப்புப் பணம் இல்லை..ஒலிம்பிக்கிற்கு 200 மில்லியன் ஒதுக்கப்பட்டிருக்குறது அதற்காக தயாராகுமாறு ஆனால்கொவிட் ஒழிப்புக்கு சிறப்பான திட்டம் இதில் இல்லை.கொவிட் வெட்க்சினைப் பெற்றுக் கொள்ள அரசாங்கத்திற்குள்ள என்ன ஆயாத்தம் இருக்கிறது என்று கேட்கிறேன்.2021 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் வெட்க்சினைப் பெற்றுக்கொள்ள இருக்கும் ஏற்பாடுகளை காட்டுமாறும் அதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை காட்டுமாறும் அரசாங்கத்திடம் கேட்கிறேன்.இந்த அரசாங்கத்திற்கு சாதாரண குடி மக்களின் பிரச்சிணைகள் பெரிதாக விளங்குவதுமில்லை,சாதாரண மக்களின் பிரச்சிணைகளுக்கு தீர்வு வழங்குவதற்கு முன்வருவதுமில்லை. ஆனால் தங்களின் வேலை சரியாக இடம் பெற வேண்டும் தங்களின் ஆதரவாளர்களின் தேவைகள் சரியாக இடம் பெற்றால் போதும் என்ற போக்கில் அரசாங்கம் செயற்படுகிறது.இதுவே இந்த வரவு செலவுத்திட்டம் கொண்டிருக்கிறது.

குறிப்பாக நான் பிரதிநிதித்துவப்படுத்தும் மலையக மக்களுக்கு மீண்டும் ஓரு முறை சுவிங்கம் தந்திருக்கிறார்கள்.முழு மலையகப்பிரச்சிணைகளையும் 1000 ரூபா என்ற இலக்கத்திற்குள் கொண்டு வந்து அதையும் வெறும் யோசனையாக தான் முன்வைத்திருக்கிறார்கள்.வரலாற்றிலேயே இது தான் முதல் தடவை மலையகம் தொடர்பாக இவ்வாறான ஓர் வரவு செலவுத்திட்டம் முன்வக்கப்பட்டிருக்கிறது.மலையக மக்களுக்கு வீட்டு பிரச்சிணை பாடசாலைகள் தொடர்பான பிரச்சினணகள் உட்கட்டமைப்புப் பிரச்சிணைகள் ஏதும் இல்லையா? விஷேடமாக கொவிட் விடயத்தில் முழு நுவரெலிய மாவட்டத்திற்கும்  பிசிஆர் இயந்திரம் ஒன்று தான் உள்ளது.மலையகத்திற்கு கொவிட் சம்பந்தமாக பாரிய பிரச்சிணைகள் உண்டு.மலையக தோட்டங்களுக்குள் இந்த கொவிட் பரவல் தொடர்பாக பாரிய அவதானமொன்றுள்ளது. ஆனால் அரசாங்கத்திற்கு எத்தகைய முன் ஆயத்தங்களுமில்லை.இது தொடர்பாக என்ன நிதி ஒதுக்கீடுகள் இருக்கிறது.எதும் இல்லை வரவு செலவுத்திட்டத்தில், வெறுமனே 1000 ரூபாவுக்குள் சுறுக்கி கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கிறார்கள். அரசாங்க தரப்பில் மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்களையும், பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஏமாற்றி இருக்கிறார்கள் போலும். நுவரெலிய மாவட்டத்திற்கும் ஒரே ஒரு பிசிஆர் இயந்திரம் மாத்திரம் தான் உள்ளது என்ற விடயம் இந்த உறுப்பினர்களுக்கு தெரியாதா என்று வினவுகிறேன்.மலையகத்தை முற்றிலும் மறந்த ஓர் வரவு செலவுத்திட்டமாகவே நாங்கள் இதைப் பார்கிறோம் என்று தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.