Header Ads



சிங்கள மக்களை உசுப்பிவிடும், அரசியலை செய்ய முடியாது - ஹரீஸ் Mp


எமது நாட்டில் வாழும் சிறுபான்மை சமூகம் அதிலும் குறிப்பாக முஸ்லிங்கள் அண்மைக்காலமாக அனுபவித்து வரும் அதி உச்சகட்ட பிரச்சினைகள் தொடர்பில் அரசின் முக்கியஸ்தர்களிடம் தெளிவாகவும், விளக்கமாகவும் அண்மையில் எடுத்துரைத்துள்ளோம். இந்த சமூகத்தின் இருப்பிலும் நிம்மதியிலும் எப்போதும் நாங்கள் பொறுமையுடனும் பொறுப்புடனும் கவனம் செலுத்துபவர்களாகவே இருக்க வேண்டும். அதுதான் நியாயமும் கூட என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின்  பிரதித்தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எச்.எம்.எம். ஹரீஸ் (பா.உ) தெரிவித்துள்ளார்.

கோவிட் -19 தொற்றில் பாதிக்கப்பட்டு மரணிக்கும் முஸ்லிம் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய மறுத்து சுகாதார தரப்பினரால் எரிக்கப்படும் நிலைமைகள் தொடர்பில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் யாரும் குரல்கொடுக்கிறார்கள் இல்லை என பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ள குழப்பகரமான நிலைகள் தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இதுசம்பந்தமாக அண்மையில் கல்முனை மாநகர சபையில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலும் கூறியுள்ளேன். அரசின் முக்கியஸ்தர்களிடம் நாங்கள் பேசிய முஸ்லிங்களின் நலன் சார்ந்த விடயங்கள் தொடர்பில் ஊடகங்களிடமோ அல்லது சமூக வலைத்தளங்களிலோ பேசி தென்னிலங்கை பெரும்பான்மை மக்களை உசுப்பி விடும் அரசியலை செய்ய முடியாது. அரசின் முக்கியஸ்தர்களிடம் பேசிய விடயங்களை பகிரங்கப்படுத்தி பல்வேறுபட்ட அதிர்வலைகளை தென்னிலங்கையில் உருவாக்கி சமூகத்தை பலிக்கடாவாக்க அனுமதிக்க முடியாது.

எங்களுக்கான நியாயமும், நீதியும் கிட்டும் எனும் நம்பிக்கை அரசு தரப்பினருடனான சந்திப்பின் போது எங்களுக்கு கிடைத்துள்ளது. எல்லாம் நன்றாக நடக்கும் எனும் நம்பிக்கையுடன் பயணிப்போம். சில இடங்களில் வெளிப்பார்வைக்கு மௌனமாக இருப்பது போன்று இருந்தே பல விடயங்களை சாதிக்க வேண்டும். இனி நடப்பவை நல்லதாகவே நடக்க வேண்டும் என்ற நம்பிக்கையுடன் பிராத்தியுங்கள். இன்ஸா அல்லாஹ் நல்லதே நடக்கும். எங்களின் பணிக்கு இறைவன் துணை நிற்பான் - என்றார்.

3 comments:

  1. அமைச்சுப் பதவிக்கான போட்டியே சிங்கள அரசியல்வாதிகளில் பலரை இனவாதம் பேசவைக்கின்றது என்பதனை எத்தனை பேர் புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பது தெரியாது. எதிர்க்கட்சியிலிருந்து சாதிப்பது இலகுவானது. றிசாட் மீதுள்ள காழ்பணர்ச்சியும் இது சார்ந்ததே. மு.காவின் ஆரம்ப காலத்தில் தவிசாளர் சேகு கூறி வந்தது இதனையே.

    ReplyDelete
  2. ஹரிஸ் நல்ல அரசியல்வாதி ஃ

    ReplyDelete
  3. என்ன கள்ளன் பொலிஸ் விளையாட்டா விளையாடுறீங்க? சிங்கள மக்களை உசுப்பேற்றாம வேலையைப் பாக்கனும் என்கிறீங்க.இரகசியமாக வைத்திருக்கும் படி கூறுகிறீர்கள். சமூக முன்னால் தலவர்கள் எல்லாம் இப்படி களவில் ஒன்றையும் சதித்துத் தரவில்லை.எல்லாம் பகிரங்கமாகவே எடுத்து தந்தார்கள்.உங்களுக்கெல்லாம் தெறியும் அடக்கம் செய்வது இந்த அரசில் நடக்காது என்று.அதற்கு இப்பொதே காரணம் தேடுகிறார்கள்.எப்ப்டியென்றால் நாம் எல்லா முயற்சிகளையும் சரியாக செய்து வந்தோம்.ஆனால் எங்கள் சமுதாயமே இவையெல்லாம் பகிரங்கப் படுத்தி இனவாதிகளுக்கு தெறியப்படுத்தி ஜனாதிபதி,பிரதமர் வரை அறியவைத்து எல்லாம் குழப்பி விட்டார்கள்.இபாடித்தான் எம்சமூகம் என்று கூறி சமூகத்தின் மேல் குற்றத்த்கைப் போட்டு அரசுக்கு வெள்ளை பூச காய் நகர்த்தும் நாடகம் இது.
    அரசியல் வதிகளே அல்லாஹ்வுக்காக வேலை செய்ய்ங்கள்.இரகசியனாக அல்ல பரகசியமாக செய்தாலும் அல்லாஹ் அடக்கம் செய்ய நாடி விட்டால் கோத்தா அல்ல மகிந்த பற்றவைக்க நாடினாலும் அல்லாஹ் நாடிய அடக்கம் தான் நடக்கும்.ஏனெனில் அல்லாஹ் அவர்களின் உள்ளத்தில் அடக்கம் செய்யும் எண்ணத்தை போட்டுவிடுவான்.இதுதான் ஒரிஜினல்.

    ReplyDelete

Powered by Blogger.