Header Ads



ஜனாஸா எரிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை இடைநிறுத்தியது CTJ, இணையவழி போராட்டத்திற்கு அழைப்பு


கொரோனாவில் மரணிப்பவர்களின் ஜனாஸாக்களை எரிக்காமல் அடக்குவதற்கு அனுமதி கோரி சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் – CTJ சார்பில் நாளை நடைபெறவிருந்த ஜனநாயக கோரிக்கை போராட்டம் ஊரடங்கு காரணமான தற்காலிகமாக இடை நிறுத்தப்படுகிறது.

கொரோனாவில் மரணிப்பவர்களின் உடல்களை உலகில் 180 க்கும் அதிகமான நாடுகளில் அடக்கம் செய்வதற்கு அனுமதித்துள்ள நிலையில் இலங்கை அரசு மாத்திரம் அடக்கம் செய்ய மறுத்து எரித்து வருகின்றார்கள். 

இந்நிலையில் ஜனாஸாக்களை அடக்க செய்ய அனுமதிக்க வலியுறுத்தி முஸ்லிம்கள் தொடர்ந்தும் குரல் எழுப்பி வருகின்றோம்.

சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ஜனாஸா நல்லடக்க அனுமதி வேண்டி ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சுகாதார அமைச்சர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் உள்ளிட்ட பலருக்கும் பல தடவைகள் எழுத்து மூலம் கோரிக்கைகளை முன்வைத்தோம்.

அனைத்து இஸ்லாமிய அமைப்புகள், பள்ளிவாயல்கள் மற்றும் தனி நபர்களும் ஜனாதிபதி உள்ளிட்ட அரசின் பல தரப்புக்கும் கோரிக்கை வைக்கும் விதமாக மகஜரை வெளியிட்டு அதனையும் அனைவரும் அழுத்தமாக முன்வையுங்கள் என கோரியிருந்தோம்.

அதன் தொடரில் ஜனாஸா அடக்க விவகாரத்தில் அடுத்த கட்டமாக அரசுக்கு அழுத்தம் தெரிவிக்கும் விதமாக ஊரடங்கு நீக்கப்பட்டால் நாளை சுகாதார அமைச்சை நோக்கி பேரணியும் ஆர்பாட்டமும் நடத்துவதாக சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் அறிவித்திருந்தோம்.

தற்போது மாளிகாவத்தை உள்ளிட்ட கொழும்பின் பெரும்பாலான பகுதிகளில் லொக்டவுன் போடப்பட்டுள்ளதினால் சட்ட ரீதியாக ஆர்பாட்டம் நடத்த முடியாத நிலை இருக்கிறது. லொக்டவுன் நீக்கப்படும் வரை தற்காலிகமாக ஆர்பாட்டம் நிறுத்தப்படுகின்றது.

ஏற்க்கனவே நாம் அறிவித்த பிரகாரம் இணையவழி போராட்டம் நாளை காலை 11 மணி முதல் நடத்தப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

இணையவழி போராட்டம் எப்படி?

தற்போது பாதையில் இறங்கி போராட முடியாது என்பதால் நாம் நமது ஜனநாயக உரிமையை இணையவழி போராட்டத்தின் மூலம் முன்வைக்க கடமைப்பட்டுள்ளோம்.

எமது ஜனாஸாக்களை எரிக்காதீர்கள்.

අපේ මෘතදේහ (ජනසා)  ආදාහනය කරන්න එපා!

Don’t cremate our Dead Bodies (Janaza)!

அடக்கம் செய்வது எமது உரிமை

භූමදානය අපේ අයිතිවාසිකමත්!

Burial is our right too!

WHO வின் அறிவுறுத்தலை இலங்கை பின்பற்ற வேண்டும்.

ලෝක සෞඛ්‍ය සංවිධානයේ උපදෙස් ශ්‍රී ලංකාව අනුගමනය කළ යුතුය!

Sri Lanka should follow the guidelines of the World Health Organization!

போன்ற வாசகங்களை ஆங்கிலம் அல்லது சிங்கள மொழிகளில் எழுதி உங்கள் வீட்டு வாசலில் நின்று குறித்த வாசகம் அடங்கிய பதாதையை ஏந்திய நிலையில் புகைப்படம் எடுத்து உங்கள் Facebook பக்கத்தில் பதிவேற்றுங்கள்.

புகைப்படத்தை பதிவேற்றும் போது #Burial_is_my_Right என்ற ஹேஷ் டேக்கை தவறாது பயன்படுத்துங்கள்.

ஜனநாயக ரீதியில் நம் உரிமையை வென்றெடுக்க முடிந்தவரை முடியுமான முறைகளிலெல்லாம் போராடுவோம்.

R. அப்துர் ராசிக் B.COM

பொதுச் செயலாளர்,

சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் – CTJ

09.11.2020

4 comments:

  1. இவர்கள் பயங்கரவாதிகள்

    ReplyDelete
  2. PAYANGARAVAATHA IYAKKAM. WAHABIKALIN PANATHAAL, THATKOLAIPADAIYAI URUVAAKKINA IVANUKAL, KULAPPAKAANURKAL. UDANADIYAAKA, KAITHU SHEIYAPPADA VENDUM.
    IVANUKALAAL MUSLIMGALUKKU, ISLATHUKKU
    PERUM ANIYAAYAM NADAKKUTHU.

    ReplyDelete
  3. Naaanga wenaamduthaanappa sonnnom.....
    Ippo okwa...
    Aarpaattam....iwanga senja aarpaattatthaala nadantha palan Enna iriki...
    Allahukkaaha ungada eimaana paathuhaathukkollunga....
    Weeena muranlaadu thewala....
    Allahukkaaha..

    ReplyDelete
  4. Every religiuos matters you ask proof. From where you got proof to protest. Is it in Quran or Sunnah ? According to your idelogy this is innovation (Bida'ah).

    ReplyDelete

Powered by Blogger.