Header Ads



எரிக்கப்படுவது மரக்கட்டைகள் அல்ல, முஸ்லிம்களின் உடல்கள் - CTJ தனித்தனியாக மீண்டும் கடிதம்

அதிமேதகு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ,

ஜனாதிபதி செயலகம்,

கொழும்பு – 01

05.11.2020


அதி மேதகு ஜனாதிபதியவர்களே!

இலங்கையில் கொரோனாவினால் உயிரிழப்போரின் உடல்கள் அடக்கம் செய்யப்படாமல் எரிக்கப்பட்டு வருகிறது.

எரிப்பதை தடுத்து சுகாதார வழிமுறைகளை பேணி முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி தருமாறு கோரி இலங்கை முஸ்லிம்கள் சார்பில் சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தினால் ஏற்கனவே கடிதம் மூலம் தங்களிடம் கோரிக்கை விடுத்திருந்தோம்.

உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்குமாறு கோரி ஜனாதிபதிக்கு கோரிக்கை கடிதம் அனுப்புங்கள் என நாம் வைத்த கோரிக்கைக்கு இனங்க முஸ்லிம் சமூகம் சார்பில் பலரும் உங்களுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்ததை அறிவீர்கள்.

நாம் உங்களுக்கு கடிதம் அனுப்பிய ஓரிரு நாட்களில் இந்த விவகாரம் பாராளுமன்றதில் பேசுபொருளாக மாறியது அந்நேரத்தில் அரசு சார்பில் சுகாதார அமைச்சர் கவுரவ பவித்ரா வன்னீயாராச்சி மற்றும் நீதி அமைச்சர் கவுரவ அலி சப்ரி ஆகியோர் “ஜனாஸா அடக்கம் தொடர்பில் ஆராய குழு அமைத்திருப்பதாகவும் அதன் முடிவ கிடைத்த பின்னர் பரிசீலனை செய்வோம்” எனவும் பாராளுமன்றில் தெரிவித்தனர்.

அமைச்சர்களின் குறித்த அறிவிப்புக்கு பின்னர் இதுவரை 3 முஸ்லிம்களின் உடல்கள் எரிக்கப்பட்டுள்ளது என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.

உலக நாடுகள் முழுவதும் உடல்களை அடக்கம் செய்கின்றது. உலக சுகாதார நிறுவனம் – WHO உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்கின்றது. இந்நிலையில் இலங்கையில் மாத்திரம் அதற்கான தடை விதிக்கப்படுவது ஒரு தலைப்பட்டமானதாகும்.

முஸ்லிம்களின் உடல்களை எரிக்கும் விவகாரத்தை மீள்பரிசீலனை செய்வதில் கூடிய கரிசனையும், அவசரமும் காட்ட வேண்டுமென்பதே எமது கோரிக்கையாகும். ஏனெனில் “எரிக்கப்படுவது உடல்களாகும்”. 

உடல்கள் எரிக்கப்படும் போதெல்லாம் முழு முஸ்லிம் சமூகமும் ஆழ்ந்த கவலையில் உரைந்து போகிறோம். எழுத்தில் குறிப்பிட முடியாத மன அழுத்தத்திற்கு ஆளாகி விடுகின்றோம். இந்நிலையில் தயவு செய்து முஸ்லிம்களின் உடல்களை அடக்கும் விவகாரத்தில் அனுமதி தருவதற்கு அவசரம் காட்டுங்கள்.

“தாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதி” என்கிற அடிப்படையில் உடல்களை அடக்கும் உத்தரவை தாமதமின்றி வழங்கி இந்த சமூகத்தின் மனக்கவலைக்கு தீர்வு தாருங்கள்.

இந்த விவகாரத்தில் ஏற்படும் ஒவ்வொரு நிமிட தாமதங்களும் உடல்கள் தீயில் கருகுவதற்குறிய சந்தர்ப்பமாக மாறிவிடுகின்றது. என்பதை கருத்திற்கொண்டு சிறப்பான முடிவை அவசரமாக வெளியிடுவீர்கள் என்ற நம்பிக்கையில் காத்திருக்கின்றோம்.

உடல்களை அடக்குவதற்கு நீங்கள் அனுமதிக்கும் பட்சத்தில் இலங்கை வரலாற்றில் பொன்னெழுத்துக்களினால் பொறிக்கப்படும் நிலையை அடையும் ஓர் அறிவிப்பாக இந்த சமூகம் அதனை பார்க்கும் என்பதுடன் உங்கள் அரசுக்கு நன்றியுடையோராகவும் இருப்போம் என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றோம்.


இப்படிக்கு,

R. அப்துர் ராசிக் B.COM

பொதுச் செயலாளர் 

சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் - CTJ

No comments

Powered by Blogger.