Header Ads



அரசுக்கு கை கொடுத்த எமது சமயோசித அரசியல், வெற்றிபெறும் நாட்கள் வெகு தொலைவிலும் இல்லை


அரசியலமைப்பின் இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவளித்ததற்கான அனுகூலங்களை முஸ்லிம் சமூகம் விரைவில் தெரிந்து கொள்ளும் என்றும், அவ்வேளையில் வீண் விமர்சகர்களின் வாய்கள் அடைத்துப் போகுமெனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவளித்தமை பற்றி தெளிவூட்டும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;

எதையும் நிபந்தனையாக குறிப்பிடாமல், எழுமாந்தமாக இருபதை ஆதரித்ததாக சிலர் எம்மை விமர்சிக்கின்றனர். பேரினவாதத்தின் விழிப்புக்கு மத்தியில் முஸ்லிம் சமூகம் சார்ந்த சில நலன்களை வியூகத்தின் வடிவிலே சாதிக்க வேண்டியுள்ளது.இதனால்தான் இன்று வரைக்கும் மௌனியாகச் செயற்படுகிறோம்.

காலப்போக்கில் சமூகநலன்கள் கை கூடுகையில், எங்களால் பேசப்பட்டவைகள் எவை என்பதை முஸ்லிம் சமூகம் உணர்ந்து கொள்ளும். இவ்வேளையில் வீண் விமர்சகர்கள் வாயடைத்து வெட்கிக்கப் போவது உறுதி.

பேரம் பேசும் பலம் இழந்துள்ளதாகக் காட்டப்பட்ட அரசியல் பின்புலங்களிலும் அவ்வாறு பலம் குன்றவில்லை என்பதை நொடிப் பொழுதில் நிரூபித்தவர்கள் நாங்கள். காலச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அரசியல் காய்களை நகர்த்த வேண்டிய நிலைமைக்கு சிறுபான்மையினர் தள்ளப்பட்டுள்ளதை, இவ்விமர்சகர்கள் விளங்காதுள்ளமைதான் எமக்குள்ள கவலை.

தம்பட்டமடிக்காது, தக்க தருணத்தில் அரசுக்கு கை கொடுத்த எமது சமயோசித அரசியல், வெற்றி பெறும் நாட்கள் வெகு தொலைவிலும் இல்லை.

கொரோனாவின் சூழலில், முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுள்ள சமய நம்பிக்கைகள் மீதான கெடுபிடிகளைக் கருத்தில் கொள்ளாமலும்,நாங்கள் இருபதை ஆதரிக்கவும் இல்லை.அல்லாஹ்வின் உதவியால்,எமது வியூகங்கள் அனைத்துக்கும் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

10 comments:

  1. திஸ்ஸ அத்தநாயக்கா போய்ச் சேர்ந்த கட்சிக்கு எஞ்சுவது தோல்வி, அதையே இந்த நபரும் பொஹட்டுவைககு மிகவிரைவில பெற்றுக் கொடுப்பார்.

    ReplyDelete
  2. ஆஹா.நடிகர் திலகம்டா. முஸ்லிம்களை நேரடியாகவே மொட்டுக்கு வாக்களிக்க விட்டிருக்கலாமே மச்சி. மேடைகளில் வீர வசனம் பேசினீகளே.இப்பதான் ஞானம் பிறந்ததோ.

    ReplyDelete
  3. மனப்பால் குடிக்க வேண்டாம் ஐயா! தாங்கள் ஒரு வெத்து வேட்டு. அன்று ஒரு பாராளுமன்றத்தில் ஒரு சிங்கள பாராளுமன்ற உறுப்பினர் உங்கள் முன்னால் வந்து பணநோட்டொன்றைக் காட்டி ஏதேதோ கூறினாரே
    என்ன அது? ஒன்று மட்டும் புரிந்தது. நீங்கள் ஓர் அரசியல் ஜோக்கர் ஐயா. இது ராஜபக்ச அரசாங்கம். நீங்கள் அவர்களுக்கு தேவையில்லை. மதியாதார் வாசல் மிதியாதீர்!. அது மானமுள்ள மனிதர்க்கு அழகு. நீங்கள் அவமதிக்கப்படும் பொழுது வீழ்வது மானத்துடன் வாழ நினைக்கும் முஸ்லீம் சமூகம் என்பதை மறக்கவேண்டாம். தங்களது கட்சி முஸ்லிம் சமூகத்தாரின் உரிமைக்காக தோற்றம் பெற்ற ஒன்று என்பதை மறந்து விடாதீர்.


    ReplyDelete
  4. SHAMUTHAAYATHAI EMAATRUM NAAIKALUKKUM
    MANITHARKALUKKUM ULLA VITHIASHATHAI
    PURUNDUKOLLA KIDAITHA SHANDARPAM.
    THALIVAN PENNAMPERIA EMAATRUKARAN.

    ReplyDelete
  5. THERINDUKONDU VENDUMEREI THAVARUSHEITHAVANIDAM NIYAAYAM
    KETKATHEY,
    POIYAN, EMAATRUKAARAN, SHEITHA
    THAVARUKALAI NIYAYAPDUTHA,
    PALA PATHILKALAI, THAYAARPADUTHI
    VAITHIRUPPAAN.!!!!!.
    ITHUTHAN UNMAI.

    ReplyDelete
  6. நீங்கள் தேர்தல் காலத்தில் பொஹட்டுவ கட்சியைப் பற்றி இல்லாத பொல்லாத பொய்களை எல்லாம் கூறி மக்களை ஏமாற்றுகிறார்கள். எங்கள் இருப்பு கேள்விக்குறியாகும் எங்கள் அடையாளங்கள் அழிக்கப்பட்டு விடும் என்றெல்லாம் பெரிய பொய்களை சொன்னீர்கள். நீங்கள் இவ்வாறு மக்களை ஏமாற்றி செல்வதை தயவு செய்து நிறுத்துங்கள். சமூகத்தை சீரழிக்க வேண்டாம்.

    ReplyDelete
  7. Its a shame to be a hafis.(asthagfirlah) Others may speak with double tongue, but not you Naseer .MP.What you did is unislamic and how can we believe you are a real hafis? You were in the forfront to support.Why did u blame accuse SLPP. at the election? Now, what made you join them Why.Why.??? Only Allah knows.You will get the punishment for deceiving us.NiyaS Ibrahim.

    ReplyDelete
  8. நீங்களெல்லாம் அரசியல் தலைமைகள் என்று நீங்களே சொல்லிக் கொல்லுங்கள்.நாங்க்ளெல்லாம் எப்பவோ உங்க்ளையெல்லாம் தூக்கி எறிந்து விட்டோம்.நீங்கள் சொல்வதையெல்லாம் நாங்கள் கேட்க? மக்களை ஏமாற்றாமல் நேரடியாக மொட்டிலே போட்டியுட்டிருந்தால் போச்சி.அப்போ வெற்றிபெற்றிருப்பீர்களா?போடா நாயே நீயெல்லாம் ஒரு ஹாபிஸ்

    ReplyDelete

Powered by Blogger.