Header Ads



திருக்குர்ஆன் பிரதிகளை பயன்படுத்தி, தீபாவளி பட்டாசு தயாரித்த தொழிற்சாலை - வலுக்கிறது எதிர்ப்பு


அமைதிப் பூங்காவான தமிழகத்தில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில், முஸ்லிம்கள் தங்களின் புனித நூலாக கருதும் திருக்குர்ஆனை அவமதிக்கும் செயலில் சிவகாசி பட்டாசு தயாரிப்பு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளதை தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது.

பிற மதங்களையும், மத உணர்வுகளையும், அவர்களின் மத நம்பிக்கையையும் முஸ்லிம்கள் மதிக்கிறார்கள். தீபாவளி உள்ளிட்ட இந்துக்களின் பண்டிகைகளுக்கு வாழ்த்து கூறும் முஸ்லிம்களும் இருக்கிறார்கள்.

இந்துக்கள் பண்டிகையான தீபாவளியின்போது, சுற்றுச்சூழல் மாசு, தீவிபத்து, நோயாளிகள், வயோதிகர்களுக்கு ஆபத்து போன்ற தீமைகளை ஏற்படுத்தும் பட்டாசுகளை வெடித்து கொண்டாடுவதை முஸ்லிம்கள் ஒருபோதும் தடுத்ததில்லை. பட்டாசின் தீமைகளை உலகமே ஒத்துக்கொண்டபோதும், அது இந்துக்களின் மத நம்பிக்கை என்று கருதி முஸ்லிம்கள் கண்டுகொள்வதில்லை.

இந்த நிலையில், திருக்குர்ஆன் பிரதிகளை பயன்படுத்தி பட்டாசு தயாரித்த செயல் முஸ்லிம்களின் நெஞ்சை வெடிக்கச் செய்துள்ளது. முஸ்லிம்கள் ஒருபோதும் இதை சகித்துக்கொள்ள மாட்டார்கள்.

தமிழக முதல்வரும், காவல் துறையும் உடனடியாக தலையிட்டு, முஸ்லிம்களின் மத உணர்வை புண்படுத்திய பட்டாசு நிறுவன உரிமையாளர்களை கடுமையான குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும். 

அந்த பட்டாசு ஆலைகளை இழுத்து மூட வேண்டும். 

மேலும் அந்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட  உரிமங்களையும் உடனே ரத்து செய்ய வேண்டும்.


இவண்,

ஏ.எஸ்.அலாவுதீன்

பொதுச்செயலாளர்

தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு

No comments

Powered by Blogger.