Header Ads



வியாபார அனுமதி கோரி, தனிநபர் கவனயீர்ப்பு போராட்டம்


தாழங்குடாவைச் சேர்ந்த நபரொருவர், தனக்கு வியாபார அனுமதிப்பத்திரம் தருமாறு கோரி, மண்முனைப் பற்று பிரதேச சபைக்கு முன்பாக இன்று (09) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டர்.


“வியாபார அனுமதிப்பத்திரத்துக்கு விண்ணப்பித்து, அதற்காக பணம் செலுத்தி பற்றுச் சீட்டும் வைத்துள்ளேன். ஆனால், வியாபார அனுமதிப்பத்திரம் தராமல் மண்முனைப்  பற்று பிரதேச சபை தவிசாளர் இழுத்தடிக்கின்றார். இதனால்  இன்று எனது வியாபார அனுமதிப்பத்திரத்தை கோரியே நான் இந்த சாத்வீகப் பேராட்டத்தை நடத்துகிறேன்” என அவர் தெரிவித்தார். 


இதையடுத்து குறிப்பிட்ட இடத்துக்கு வந்த காத்தான்குடி பொலிஸார், போராட்டம் நடத்தியவருடனும் மண்முனைப் பற்று பிரதேச சபை தவிசாளருடனும் பேசியதைத் தொடர்ந்து அந்நபர் அங்கிருந்து சென்றார்.


இது தொடர்பாக கருத்து தெரிவித்த மண்முனைப் பற்று பிரதேச சபை தவிசாளர் எஸ்.மகேந்திரலிங்கம், மேற்படி நபர், அவரது வியாபார நிலையத்தை பிழையான முறையில் நிர்மானித்தததால், அக் கட்டட நிர்மானத்தை நிறுத்துமாறு எமது சபை அறிவுறுத்தியது.


“கொரோனா சூழலைப் பயன்படுத்தி, இவர் கட்டடத்தை நிர்மாணித்து முடித்து விட்டார். இந்த நிலையில் எமது சபையால் இவருக்க வியாபார அனுமதிப்பத்திரத்தை வழங்க கூடாது என சபையின் 20.04.2020 திகதிய அமர்வில் 5520ஆம் இலக்க தீர்மானத்தின் படி இவருக்க அனுமதிப் பத்திரம் வழங்கக் கூடாது என தீர்மானிக்கப்பட்டதன் அடிப்படையில், இவருக்கான வியாபார அனுமதிப்பத்திரத்தை வழங்க வில்லை” என்றார். 


 எம்.எஸ்.எம்.நூர்தீன்


No comments

Powered by Blogger.