Header Ads



இலவசமாக இண்டர்நெட் டேட்டா தருகிறோம் என, வட்ஸப்பில் வரும் தகவல்களை நம்பாதீர்கள்

இலங்கையில் இலவசமாக இணைய டேட்டா வழங்குவதாக தனிப்பட்ட தரவுகளை திருடும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக எச்சரிக்கைப்பட்டுள்ளது.

இலவசமாக டேட்டா வழங்குவதாக சமூக வலைத்தளம் ஊடாக ஆபத்தை ஏற்படுத்தும் மென்பொருள் தொலைபேசிகளில் தறவிறக்கம் செய்யும் செயற்பாடு தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதளாக இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் தெரிவித்துள்ளது.

இலவசமாக டேட்டா வழங்குவதாக வரும் தகவலுடன் உள்ள Linkஐ அழுத்தும் போது அது மேலும் சமூக ஊடக பயனாளர்கள் 20 பேர் அல்லது அதற்கும் அதிகமானோருக்கு குறித்த இணைப்பை பகிர்ந்து, உங்கள் தனிப்பட்ட தகவல்களை வழங்கினால் அரசாங்கத்தினால் வழங்கப்படும் இலவச டேட்டாவை பெற்றுக் கொள்ள முடியும் என அந்த குறுந்தகவலில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

தற்போது இந்த தகவல்கள் இணைய மூலம் கற்கும் மாணவர்களுக்கும் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மத்தியில் எவ்வித தேடலுமின்றி பகிரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த மோசடி நடவடிக்கையில் அதிகளவான பல்கலைக்கழக மாணவர்கள் சிக்கியுள்ளதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான போலி தகவல் ஊடாக ஆபத்தான மென்பொருள்கள் தொலைபேசியில் தரவிறக்கம் செய்யப்படுகின்றது. இதன் மூலம் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் சமூக வலைத்தள கணக்குகள் திருடப்படுவதாக இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

No comments

Powered by Blogger.