November 12, 2020

இஸ்லாத்தை விட்டு வெளியேறிய றிஷ்வின் இஸ்மத்திற்கு, ஜமாத்தே இஸ்லாமி ஆதரவாளர் அச்சுறுத்தலா...?


இலங்கையில் பொதுமக்கள் மத்தியில் முன்னாள் முஸ்லிமாக அறியப்படும் றிஷ்வின் இஸ்மத், கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி இரவு 11.45 அளவில், உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் வளாகத்தில் வைத்து ஸ்ரீ லங்கா ஜமாத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பரின் ஆதரவாளர் ஒருவரினால் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

றிஷ்வின் இஸ்மத் இலங்கை முன்னாள் முஸ்லிம்களின் கவுன்ஸிலின் ஊடகதொடர்பாளராகவும், இஸ்லாத்தை விட்டு வெளியேறிய மதமற்றவர்களுக்காக செயற்படும் குறித்த அமைப்பின் பகிரங்கமாக அறியப்பட்ட ஒரே பிரதிநிதியாகவும் உள்ளார். ஸ்ரீ லங்கா ஜமாத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவரை ஆணைக்குழுவின் அனுமதியுடன் குறுக்கு விசாரணை செய்வதற்காக குறித்த தினம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜாராகி இருந்தார். இலங்கையை ஆயுதக் கிளர்ச்சி மூலம் கைப்பாற்றி இஸ்லாமிய தேசமாக மாற்றுவதற்காக திட்டமிட்டமை, ஸ்ரீ லங்கா ஜமாத்தே இஸ்லாமியின் உத்தியோகபோர்வ மாதாந்த வெளியீடான அல்ஹஸனாத் இல் ஜிஹாத் மற்றும் தீவிரவாதத்தை தூண்டும் ஆக்கங்களை வெளியிட்டமை, இலங்கை முஸ்லிம் இளைஞர்களை ஜிஹாத் போராட்டங்களிற்காகவும், ஆயுதப் பயிற்சிகளுக்காகவும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் காஷ்மீருக்கு அனுப்பி வைத்தமை ஆகியவை தொடபிலே ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களிடம் றிஷ்வின் இஸ்மத் அவர்களின் முக்கிய கேள்விகள் அமைந்திருந்தன. ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அன்றையஅமர்வு நிறைவடைந்து வெளியேறிச் செல்லும் பொழுதே அச்சுறுத்தல் விடுக்கப்பட்டள்ளது. மறுநாள் (27 ஆம் திகதி) மேற்படி அச்சுறுத்தல் தொடர்பில் றிஷ்வின் இஸ்மத் ஆணைக்குழு முன்னிலையில் தெரிவித்துள்ளார். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு ‘சாட்சிகள் மற்றும் குற்றங்களில் பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாப்பதற்கான தேசிய அதிகாரசபைக்கு’ ஆணைக்குழுவின் தலைவர், மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஜனக் டி சில்வா உத்தவிட்டார்.

இந்த நிலையை மேலும் மோசமாக்கும் வகையில் ஒக்டோபர் 31 ஆம் திகதியன்று கெக்கிராவை பிரதேசத்தை சேர்ந்த அரசாங்க பாடசாலை ஆசிரியரான மஹ்ரூப் என்பவர் சமூக ஊடகம் மூலமாக றிஷ்வின் இஸ்மத் அவர்களுக்கு அவரின் தாயாரை வன்புணர்விற்கு உள்ளக்குவதாக அச்சுறுத்தல் விடுத்திருக்கின்றார்.

2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் காத்தான்குடி அலியார் சந்தி மோதல் இடம்பெறுவதற்கு பல மாதங்களுக்கு முன்னரே இலங்கையில் இடம்பெற்றுவந்த சந்தேகத்திற்கிடமான இஸ்லாமிய பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பில் பாதுகாப்புத் தரப்பினரை விழிப்பூட்டிய மிகச் சிலரில் றிஷ்வின் இஸ்மத்தும் ஒருவராவார். இவர் தனது முதலாவது முறைப்பாட்டை 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் மேற்கொண்டு இருந்தார். பாடசாலை மாணவர்களுக்காக அரசாங்கம் வெளியிடும் இலவச இஸ்லாம் பாடப் புத்தகத்தில் இஸ்லாமிய தீவிரவாத கருத்துக்கள் இடம்பெற்றிருப்பதை இவர் முதன் முதலில் பாராளுமன்ற தெரிவுக் குழுவின் முன் வெளிப்படுத்தி இருந்தார். இஸ்லாம் மதத்தை விட்டு வெளியேகின்றவர்களுக்கும், இஸ்லாத்திலிருந்து வேறு மதங்களை ஏற்றுக் கொள்பவர்களுக்கும் தண்டனை “கொலை” என்று இஸ்லாம் பாடப் புத்தகத்தில் குறிப்பிடப் பட்டுள்ளதுடன், கசையடி, கையை வெட்டுதல், கல்லெறிந்து கொலை செய்தல் போன்ற பிற்போக்கான குரூர தண்டனைகள் குறித்தும் மாணவர்களுக்கு குறித்த புத்தகத்தின் மூலம் கற்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை ஒரு முஸ்லிம் நாடாக இல்லாத பொழுதும் முன்னாள் முஸ்லிம்களுக்கு தமது அடையாளத்தை வெளிப்படுத்தி வாழ்வது சாத்தியமற்றதாகவும், ஆபத்தானதாகவுமே காணப்படுகின்றது, இதனால் ஏனைய முன்னாள் முஸ்லிம்கள் தமது அடையாளத்தை மறைத்து வாழும் நிர்ப்பந்த நிலையில் இருக்கின்றார்கள்.   

கடந்த சில வருடங்களாக இஸ்லாமியவாதிகளினதும், தீவிரவாதிகளினதும் தொடரான அச்சுறுத்தல்களுக்கும், துன்புறுத்தல்களுக்கும் றிஷ்வின் இஸ்மத் முகம் கொடுத்து வருகின்றார். இந்த நாட்டின் வரலாற்றில் இடம்பெற்ற மோசமான இஸ்லாமிய பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவரும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு வளாகத்திற்குள்ளே வைத்து விடுக்கப்பட்ட அச்சுறுத்தலானது இந்நாட்டில் இஸ்லாமியவாத வலையமைப்பு எந்த அளவு ஆழமாக ஊடுருவியுள்ளது என்கின்ற ஆபத்தான நிலமையையே காட்டுகின்றது. இந்த நாட்டில் இன்னொரு ஆபத்து / பேரழிவு ஏற்படாமல் தடுப்பதற்காக இலங்கை அரசாங்கம் இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இலங்கை முன்னாள் முஸ்லிம்களுக்கான கவுன்ஸில் கேட்டுக் கொள்கின்றது.


7 கருத்துரைகள்:

who is this culprit author ???

Why publishing this kind of useless article/news. ??

For JM this is kind of news is not good at all for Muslim community in Sri Lanka.
You are pouring oil to fire by publishing this kind of news .
Please use common sense when reporting to news ..Prophet said warned people to report every news they hear without authentication..This is not a true journalism at all.

அல்லாஹ் போதுமானவன்.

இந்த நாட்டில் நீண்ட காலமாக நடுநிலை சிந்தனை போக்குடன் இஸ்லாமிய பணியை செய்து வரும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமி போன்ற அமைப்புகளை இல்லாமல் செய்வதற்கு எப்படியெல்லாம் சதி நடக்கிறது

இந்த செய்தியை jaffna இணையதளம் வெளியிட்டதின் நோக்கம் என்ன? இதில் என்ன பிரயோஜனம்? கொள்ளிக்கட்டையால் முதுகை சொரியும் வேலையை சமுதாய நலன் கருதி விடுங்கள். யாரோ எழுதிய இவ்வாக்கத்தில் பாரதூரமான வார்த்தைகளை கருத்தில்கொள்ளாமல் அப்படியே பிரசுரிதிருப்பது வேதனையான விடயம்

முஸ்லிம்களை அடிப்படைவாத பயங்கரவாதத்தின் பின் செல்லவிடாமல் தடுத்து நல்வழிப்படுத்த நினைக்கும் இஸ்மத் போன்றவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவேண்டியது அரசாங்கத்தின் கடமை.

so i compelled to "no comment"

Post a comment