Header Ads



முஸ்லிம் நாடுகளுக்கு விதிக்கப்பட்ட பயண, தடையை நீக்குவதாக ஜோ பைடன் உறுதி


பல நாடுகளுக்கு எதிராக ட்ரம்ப் நிர்வாகம் விதித்துள்ள பயணக் கட்டுப்பாடுகளை உடனடியாக நீக்குவதாக அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன் உறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன், 13 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் மீதான டொனால்ட் ட்ரம்பின் பயணத் தடைகளை இரத்து செய்ய விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பயணத் தடைகள் விதிக்கப்பட்ட நாடுகளில் பெரும்பான்மையானவை முஸ்லிம் மற்றும் ஆபிரிக்க நாடுகள் ஆகும்.

2017 ஆம் ஆண்டில் ஜனாதிபதியாக பதவியேற்ற சிறிது காலப் பகுதியிலேயே ட்ரம்ப், ஏழு பெரும்பான்மை முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த பயணிகள் அமெரிக்காவிற்கு செல்வதற்கு தடை உத்தரவு பிறப்பித்தார்.

எனினும் அதன் பின்னர் ட்ரம்ப் நிர்வாகம் சட்ட சவால்களுக்கு மத்தியில் பல முறை இந்த உத்தரவை மறுசீரமைத்தது மற்றும் அதன் ஒரு பதிப்பை உச்ச நீதிமன்றம் 2018 இல் உறுதி செய்தது. 

கொள்கை வல்லுநர்களின் கூற்றுப்படி, நிர்வாக உத்தரவு மற்றும் ஜனாதிபதி பிரகடனத்தால் குறித்த நாடுகளுக்கான பயண தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், தடைகள் எளிதில் இரத்து செய்யப்படலாம்.

ஆனால் பழமைவாதிகளிடமிருந்து முடிவுகளினால் இந்த செயல்முறையை தாமதப்படுத்தக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

ஒக்டோபரில், அமெரிக்காவில் வெறுக்கத்தக்க குற்றங்களின் எண்ணிக்கையை எதிர்த்துப் போராடுவதற்கு அரசியல்வாதிகளை சட்டங்களுக்காக தள்ளுவதாகவும் பைடன் உறுதியளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. ஆரம்பம் நல்லாக தான் இருக்குது. அப்படியே இருக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Powered by Blogger.