Header Ads



இஸ்லாத்தை சேர்ந்த அலி சப்ரீ, நீதியமைச்சர் என்பதற்காக நாட்டின் சட்டத்தை மாற்ற முடியாது


இஸ்லாமிய மதத்தை சேர்ந்த அலி சப்ரீ நீதி அமைச்சர் என்ற காரணத்தினால் நாட்டின் சட்டத்தை மாற்றிக்கொள்ள முடியாது என தேசப்பற்றுடைய பிக்குகள் முன்னணியின் செயலாளர் பெங்கமுவே நாலக தேரர் தெரிவித்துள்ளார்.

அலி சப்ரீ நீதி அமைச்சராக நியமிக்கப்பட்ட போதிலும் சுகாதாரம் உள்ளிட்ட நாட்டின் சட்ட திட்டங்களில் மாற்றம் செய்ய முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை மண்ணில் புதைப்பதற்கு அனுமதிக்கப்பட முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொவிட் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலங்களை புதைப்பதற்கு அனுமதிக்கும் தீர்மானத்திற்கு தேசப்பற்றுடைய பிக்குகள் முன்னணி கடும் எதிர்ப்பை வெளியிடுவதாகத் தெரிவித்துள்ளார்.

ஒட்டுமொத்த மக்களின் நலனை கருத்திற் கொண்டு அரசாங்கம் சரியான தீர்மானம் எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

மரணிக்கும் முஸ்லிம்களின் சடலங்களை நல்லடக்கம் செய்வது இஸ்லாமிய மத நம்பிக்கை என்றாலும், கொரோனா போன்ற பயங்கரமான தொற்று நோய் நிலைமையின் போது முஸ்லிம் தலைவர்கள் சற்று நெகிழ்வுத் தன்மையுடன் இருக்க பழகிக்கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார்.

நீர் ஊற்றுக்கள், கிணற்று நீர் போன்றவற்றை அதிகளவில் பயன்படுத்தும் இலங்கை போன்ற நாடுகளில் இவ்வாறான சடலங்களை அடக்கம் செய்வதனால் அந்த நீர் ஊடாக நோய்த் தொற்று பரவும் அபாயம் காணப்படுவதாக பெங்கமுவே நாலக்க தேரர், தெற்கு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

8 comments:

  1. Hope, they forgot to understand that the covid sick individuals in hospital and corontined at home release daily unrin and fecal meterial are already mixing with water bodies through the soil. Even if they send it to toilet pits, finally it will mix with eart. As per their claim, these wastes also should be taken to burning process and not allowed to mix with land.

    Did they understand... this ?

    They are only busy with matters related to Muslims religious practices and not what is happening in the countries .

    If these people and health authority will take charge of these waste material disposal ... ?

    ReplyDelete
  2. இந்த இனவாதிகளின் திட்டங்களைப் பார்த்தால், இது அரசாங்கம் திட்டமிட்டு அதன் இனவாத வலையமைப்பை பலவகை இனவாதிகளையும் இணைத்து செயற்படுத்திக் கொண்டு அதே நேரம் அலிசப்ரிக்கு கரட் கொடுக்கின்றது. இந்த நயவஞ்சக் குப்பார்களின் நடத்தைக்கு என்ன பரிகாரம் காணலாம் என முஸ்லிம் உம்மத் சரியான முறையில் திட்டமிட்டு செயற்படும் ஒரு அறிஞர் கூட்டத்தை உருவாக்கிச் செயற்படாவிட்டால் இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு இருப்பு என்பது பெரிய கேள்விக்குறியாக இருக்கும்.

    ReplyDelete
  3. இவக ஒரு வேல scientist ஆக இருப்பாக போல.

    ReplyDelete
  4. ஒருவரும் முஸ்லிகளிடம் இறக்கப்பட்டு வேலை செய்வதாக தெரியவில்லை. எல்லாரும் அவரவர் அரசியலை செய்கிறார்கள். முஸ்லிகளுக்கு நாட்கள் சென்று தான் எல்லாம் புரியும். இன்ஷா அல்லாஹ் எல்லா திட்டங்களும் முஸ்லிம்களுக்கு சாதகமாக அவன் ஆக்குவாயாக.

    ReplyDelete
  5. corona on the way for you, bloody racist monk, you people dangerous then Corona, people need to find out vaccine for it.

    ReplyDelete
  6. கெபினட்அமைச்சராக அலிசப்ரி அவர்கள் இருக்கும்வரை சகித்துக் கொள்ள முடியாத இனவாதிகளும் முஸ்லீம்களின் ஒரு சாராரும் அமைதியாக இருக்கப் போவதில்லை.
    அமைச்சர் அவர்கள் மிக எச்சரிக்கையாக இருக்க்வேண்டும .

    ReplyDelete
  7. @Cader: உங்களுக்கு தெரியாதா என்ன? இப்ப எல்லாரும் விஞ்ஞானிகள்தான்.

    ReplyDelete

Powered by Blogger.