Header Ads



சகல மதங்களையும் மதிக்கும் மகிந்த ராஜபக்ஷ, இந்நாட்டு மக்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் - ஆளுநர் முஸம்மில்


பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் 75ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டும் கொவிட் 19 வைரஸ் தாக்கத்திலிருந்து நாட்டை பாதுகாக்கவும் வேண்டி ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே .எம். முஸம்மில் தலைமையில் பதுளை பிரதான ஜூம்ஆப் பள்ளிவாசலில் சமய நிகழ்வொன்று நடைபெற்றது.

இதன் போது உரையாற்றிய ஆளுநர் ஏ.ஜே .எம். முஸம்மில், 'பிரதமர் மகிந்த ராஜபக்ஷ இந்த நாட்டின் கலாசார அமைச்சர், அனைத்து மதங்களையும் மதிப்பவர், அவர் போன்ற ஒரு தலைவர் இந்த நாட்டுக்கு கிடைத்து இந்த நாட்டு மக்களின் அதிர்ஷ்டம், மென்மேலும் இந்த நாட்டுக்காக சேவை செய்ய அவருக்கு நீண்ட ஆயுள் வேண்டி பிரார்த்திப்போம்' எனத் தெரிவித்தார்.

 சர்வமத நிகழ்வுகளுடன் நடைபெற்ற இந்த சமய நிகழ்வில் பதுளை முதியங்கான ரஜமகா விகாரைக்கு பொறுப்பான மலகல சந்திம தேரர், இஸ்லாம், கத்தோலிக்க மற்றும் இந்து மதத் தலைவர்கள், ஊவா மாகாணத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் வீரசிங்க, பதுளை நகர மேயர் பிரியந்த அமரசிரி,  ஊவா மாகாண பிரதான செயலாளர்  பி.டீ. விஜயரத்ன, ஆளுநரின் செயலாளர் நிஹால் குணரத்தன உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து சிறப்பித்தனர்.



5 comments:

  1. நாட்டுக்கே ஆளுனராக வரவேண்டிய மாமனிதர் ஏ.ஜே.எம்.முஸம்மில்!.

    ReplyDelete
  2. ஏன்.. உங்களை மட்டும் எரிக்க மாட்டோம் என்று எழுதி கொடுத்தாரா ?

    ReplyDelete
  3. கொய்யால கூவுடா கூவூ

    ReplyDelete
  4. Every muslim ask dua for burial as important matter for the sake of Allaah but your intention is satisfy your master for you own gains.

    ReplyDelete

Powered by Blogger.