November 30, 2020

சுமந்திரன் ஐயாவுக்கு, இஸ்லாமிய சமூகம்சார் உளமார்ந்த நன்றிகள் பல கோடி...!

   சுமந்திரன் சேர்!

சகோதர சமூகத்தின்

உளக்காயங்களுக்கு

மருந்திட வந்திட்ட

மரியாதைமிகு

சுமந்திரன் ஐயாவுக்கு

இஸ்லாமிய சமூகம்சார்

உளமார்ந்த நன்றிகள்

பல கோடி!


எமது உறவுகள் அல்ல

எமது உணர்வுகளே

எரிக்கப்பட்டன சார்!


விஞ்ஞான ரீதியிலா

அஞ்ஞான ரீதியிலா

அநீதி என்பதை

மெய்யாக நீங்கள்

மன்றில் பேசி,

மன்றாடுவது 

எமக்காக அல்லளூ

சிறுபான்மையின்

நசுக்கப்படும் உரிமைக்காய்!


வெகுமதி சொல்லவியலா

வெருட்சியில் நாம்

அகமதில் உம்மை

அகிலமெலாம்

அமுதூட்டுவோம்!


மத வேறுபாடுகள்,

மனிதத்திற்கப்பால்

என்பதை உரத்த

போராட்டத்தில்

பார்த்தோம் ஐயா!


மதத்தால் வேறாயினும்,

இனிய மொழியால்,

கனிய தேசத்தால்

வேறில்லை

ஒன்று நாம்!


பல்லின சமூகமும்

சொல்லுது உங்களது

நீதியியலின்

ஆதி வரலாற்றை

சாதி பேதமில்லை என!


சமூகங்கள் இணைய

சமுத்திரப் பாலமாய்,

சட்டம் பேசி நீவிர்

சங்கமித்தீர்!


வாதாட்ட வீரன்ளூ

அஞ்சா நெஞ்சன்ளூ

முகஸ்துதி அல்லளூ

உளச்சுத்தியாய்

உரைக்கிறேன் ஐயா!!


வாழ்க பல்லாண்டு

வளமுடனும்

நலமுடனும்

நம் தேசத்திற்காய்

நீதியின் வாசத்திற்காய்

இறை துணையோடும்

எமது துஆவோடும்!


அஷ் ஷைக் நாகூர் ளரீஃப்


10 கருத்துரைகள்:

வாழ்க வளமுடன்.

Send 22 Muslim Mps home. They have done more harm to our community, this nation, and humanity. They do not deserve to be in politics. Hakeem and Richard accumulated wealth but have done nothing.

Muslim politicians can change the truck but muslim community will always respect your valuable service. We always respect you sir.

அழகு தமிழ் கவிதையிலே நன்றிப்பா கூறி நச்சென்று வாழ்த்திவிட்டார் சுமந்திரன் ஐயாவை நீடுழி வாழவென்று. நம் சமுகத்துக்காக வாழ்த்திய உம்மையும் மனமாற வாழ்த்துகிறேன் சகோதரா! நலமுடன் வாழ. நியாஸ் இப்றாகிம் கல்முனை.

வடக்கு கிழக்கு முஸ்லீம்களும் தமிழர்களும் ஓர் அணியாக ஒற்றுமையாய்செயல்படுவோமாக இருந்தால் அதுவே வடக்கு கிழக்கிலுள்ள சிறுபான்மை இன மக்களுக்கும் வடக்கு கிழக்கிற்கு வெளியே உள்ள சிறுபான்மை இனத்திற்கும் பாதுகாப்பாக அமையும். யாராவது இதை கேள்விக்குட்படுத்துவார்களாக இருந்தால் பொது மேடையில் விவாதிப்பதற்கு தயாராக உள்ளோம்.நான் ஓய்வுபெற்ற அதிபர் என்ற வகையில் அனுபவத்தில் கூறுகிறேன்.

இன்றைய காலகட்டத்தில் நீங்கள் சொல்வது சாலப் பொருத்தம்.தமிழ் முஸ்லிம் உறவு பலப்படுத்தப்பட வேண்டும்.இதனை புத்திஜீவிகள் தான் வழிநடத்தவேண்டும்.நியாஸ் இபறாஹிம்

ஒற்றுமை என்பது மஹா வலிமையுடையது.அந்த சக்தியால் கட்டுண்டவர்கள் சாதித்தவை ஏராளம்.மதமோ, கலாச்சாரமோ, மொழியோ அல்லது பொருளாதார முன்னெடுப்புகளோ எம்மை
பிரிக்கவில்லை.மாறாக இந்த கேடுகெட்ட அரசிலும் அது நடத்திய நாடகங்களும் எமக்கிடையே தேவையற்ற சந்தேகங்களையும் அவநம்பிக்கைகளையும் ஏற்படுத்தி எம்மை பிருத்தாழ்கிறது.இவைகளை உணர்ந்து செயல்படுவோமாக இருந்தால் றபீக் அதிபரின் கூற்றுக்களை உண்மைப் படுத்தலாம்.இதற்கு சுமந்திரன் ஐயா போன்ற தலைமைகள் இருபக்கமும் இருப்பது அவசியமாகும்.

முஸ்லிம்களால் மதிக்கப்படவேண்டிய மாற்று இன தலைவர்கள் பலர் இருக்கின்றனர். அவரகளுல் மிக மிக மேம்பட்டவரதான் சுமந்திரன் ஐயா அவரகள். முஸ்லிம்களுக்குள்ளும் தலைவர்கள் என்ற பட்டம் பெற்றோர் பலர் இருக்கின்றனர். ஆனால் அவரகள் "இயக்கப்படுவதற்கு" ஏதாவது ஒரு வகையில் பெற்றோல் அடிக்க வேண்டும்'.

கற்றுத்தந்த ஆசான்களுக்கும் பெற்று வளர்த்த பெற்றோர்கள் நன்றிகூறி நீண்ட காலம் நோய் நொடியின்றி வாழ வாழ்த்துகிறேன்

Post a comment