Header Ads



கொரோனா ஜனாசாக்களை அடக்குவதால், ஆபத்து இல்லையென புரிந்து கொண்டது நல்ல விடயமாகும் - மங்கள


இனவாத அடிப்படையிலான ஜனரஞ்சகக் கவர்ச்சியானது குறுகிய ஆயுளைக் கொண்டது என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

சிங்கள பேரினவாத கொள்கையுடைய இந்த அரசாங்கம் ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலின் போது முஸ்லிம் விரோத கொள்கைகளை பரப்பி பிரச்சாரங்களை மேற்கொண்டதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

இவ்வாறான ஓர் பின்னணியில் கொவிட்-19 பாதிப்பினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை அடக்கம் செய்வதனால் சுகாதார ரீதியான ஆபத்துக்கள் கிடையாது என இந்த அரசாங்கம் தற்பொழுது ஒப்புக் கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிந்தியேனும் உண்மைகயை புரிந்து கொண்டமை நல்ல விடயமேயாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இனவாத அடிப்படையிலான பிரபல்யம் குறுகிய ஆயுளைக் கொண்டது எனவும்,அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்றாம்பிடம் இது பற்றிய பாடங்களை கேட்டறிந்து கொள்ள முடியும் எனவும் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டதன் மூலம் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

1 comment:

Powered by Blogger.