Header Ads



இஸ்லாமியர்களை அடக்கம்செய்ய அனுமதிக்க வேண்டும், ஆனால் மன்னாரில் அனுமதிக்க முடியாது


(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

கொவிட் -19 வைரஸ் தொற்றுநோய் தாக்கத்தில் உயிரிழந்த இஸ்லாமியர்களை அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும், ஆனால் அனைவரையும் மன்னார் மாவட்டத்தில் அடக்கம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது, இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. 

இறந்தவர்களை அவரவர் பிரதேசங்களில் அடைக்கம் செய்ய வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ்  நிர்மலநாதன் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று -19- வியாழக்கிழமை, வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.  அவர் மேலும் கூறுகையில்,

கொவிட் -19 வைரஸ் தொற்றுநோயில் உயிரிழந்த இஸ்லாமியர்களை அவர்களின் சடங்குகளுக்கு ஏற்ப அடக்கம் செய்ய பிரதமர் யோசனை ஒன்றை அமைச்சரவையில் முன்வைத்ததாக பத்திரிகைகளில் அறிந்துகொள்ள முடிந்தது. 

அதனை நாம் வரவேற்கிறோம். அவரவர் மத சடங்களுக்கு அமைய உடல்களை அடக்கம் செய்ய வேண்டும் அதுவும் சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு அமைய முன்னெடுக்க வேண்டும் என்பதை நாமும் ஏற்றுக்கொள்கிறோம்.

ஆனால் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் பத்திரிகைகளில் வேறு தகவல்களும் வெளிவருகின்றன. இறந்தவர்களை அடக்கம் செய்ய மன்னார் மாவட்டத்தை தெரிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது. 

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இந்த யோசனைகளை முன்வைத்ததாக அறிந்துகொள்ள முடிகின்றது. கடல் இருக்கின்ற காரணத்தினால் மன்னார் உகந்த பிரதேசம் என கூறியுள்ளதாக அறிய முடிகின்றது. இது உண்மையான காரணியாக இருந்தால் இலங்கையை சுற்றி கடல் தான் உள்ளது. 

ஆகவே அந்தந்த மாவட்டங்களில் ஒரு பொது இடத்தில் அடக்கம் செய்ய வேண்டுமே தவிர அனைவரையும் மன்னார் மாவட்டத்தில் அடக்கம் செய்யக் கூடாது, அது மக்களிடையே தவறான சிந்தனையை உருவாக்கும்.

5 comments:

  1. அரசாங்கம் முடிவு செய்து விட்டால் இந்த நாய் யார் இவனால் என்ன மசிரை பிடுங்க முடியும்? எமக்கு வேண்டும் அரசாங்கத்தின் முடிவு மட்டுமே கண்ட நாய்களின் அபிப்பிராயம் அல்ல

    ReplyDelete
  2. மற்றொரு துவேசம் நச்சைக் கக்குகின்றது

    ReplyDelete
  3. @NGK, அரசாங்கம் அனுதிக்காது. எனேனில் முஸ்லிம்கள் தொடர்ச்சியாக செய்துவரும் துரோகங்களால் சிங்களவர்கள் உங்கள் மீது கடும்கோபத்தில் உள்ளார்கள

    ReplyDelete
  4. Charles Sir, Good question
    மன்னார் என்ன dumbing groundஆ?
    அந்த அந்த ஊர்களில் அடக்கம் செய்தார் என்ன? அதை சிங்களவர்களிடம் கேட்ட முஸ்லிம்களுக்கு பயமோ பயம்

    ReplyDelete

Powered by Blogger.