November 21, 2020

யூதர்களின் வணக்கம் - தெஹ்ஃபில்லாஹ் (தொழுகை)


வரலாறும் நாகரிகமும்

முஸ்லிம்கள் போல, யூதர்களுக்கு கடமையாக்கப்பட்ட மூன்றுவேளை ஸ்மனீம் (வக்து) தொழுகை உண்டு. அதில் அதிகாலை தொழுகை சக்கரித் (சுபுஹ்)

நண்பகல் தொழுகை மின்னாஹ் (லுஹர்)

மாலை தொழுகை மகரீவ் ( மஃரீபு)

அதுபோக முஸ்லிம்களுக்கு ஜும்மா குத்பா போல அவர்களுக்கு சனிக்கிழமைகளில் குர்ரம் எனும் ஜமாத் தொழுகை உண்டு.

தனாக், தால்மூத், ஹலாக்கா போன்ற வேதப்பிரிவுகள் இரண்டிலும் யூத ஆண் - பெண் இருவருக்கும் இது கட்டாயமாகும். இந்த வேதங்களில் இருந்து வெவ்வேறு வசனங்களை கொண்டு ஆண்/பெண் இருவரும் தொழுகை நிறைவேற்ற வேண்டும்.

யூதர்களுக்கு தொழுகை நடத்த 10-13 மின்யான்கள் (இமாம்கள்) தேவை , பெண்களுக்கு பெண்களே மின்யானாக இருக்கலாம். ஆண்/பெண் இருவரும் வெவ்வேறு ஜமாத்துகள் அமைத்து தொழுகை நடத்திக்கொள்ளுவார்கள்.

இஸ்லாமிய தொழுகை அழைப்பான பாங்கோசை (அஸான்) போலவே யூதர்களுக்கும் பாங்கோசை உண்டு அதனை "பரேக்கு" என்கிறார்கள், யூத பாங்கு அழைப்போரை "ச்சஸான்" (முஅத்தீன்) என்பார்கள். முந்தைய காலங்களில் யூத பாங்கோசை ஒருவித மான்கொம்பினை ஊதி அழைப்பதாக இருந்தது, இன்றும் ஆர்தடாக்ஸ் யூதர்களிடையே கொம்பூதி தொழுகைக்கு அழைப்பதே பாரம்பரியமாக உள்ளது. 

யூதர்களின் பாங்கு

Bless the Lord, the Blessed One!", "Blessed is the Lord, the Blessed One forever and ever." 

(இதனை தொழுகைக்கு குழுமியிருப்போர் திரும்ப சொல்ல வேண்டும்.)

முஸ்லிம்களின் தொழுகைக்கு ஐந்து நிலைகள் உண்டு (தக்பீர், கியாம், ருக்கூஹ், சுஜூத் மற்றும் தஷஹுத் ), அதுபோலவே யூதர்கள் தொழுகைக்கும் ஐந்து நிலைகள் உண்டு.

யூதர்கள் சாலமன் டெம்பிளின் (Wailing wall) இடிந்த சுவற்றில் தலையை முட்டிக்கொண்டு தொழும் நிலையை அமிதாஹ் (வேதம் ஓதும் போது எழுந்துநின்று ஓதுதல்) என்பார்கள். யூதர்கள் தொழும் போது தலையில் பாரம்பரிய தெஃபிலின் (தொப்பி) அணிந்துகொள்வார்கள், யூதப்பெண்கள் ஃபிரம்கா (புர்கா) அணிவார்கள். பெண்கள் மூன்றுவேளை தொழுகையும் தினமும் நிறைவேற்ற தேவையில்லை, இரண்டு நாளுக்கொருமுறை தொழுகை செய்தால் போதும், மாதவிடாய் காலங்களில் விடுப்பும், கர்ப்ப காலத்தில் அமர்ந்தநிலையில் தொழுக அனுமதியும் உண்டு. 

யூதர்களுக்கு சஃபாத் என்பது முஸ்லிம்களின் ஜும்மாவை போன்றதாகும். முஸ்லிம்களுக்கு ஹஜ்,உம்ரா போல யூதர்களுக்கு வருடத்தில் மூன்று முறை ஷாலோஷ் ரிகாலிம் (புனித யாத்திரை ) உண்டு. அவை பெஷாக் எனும் பாஸ்ஓவர் பார்டி, ஷவூத் எனும் வாரம் ஒருமுறை சாலமன் கோவிலுக்கு போவது ஷுக்கூத் இறுதியாக இது தான் இஸ்லாமியர்களின் ஹஜ் கிரியைகளில் ஒன்றான அரஃபாவில் குடில் அமைத்து தங்குவது போல, யூதர்களின் காலண்டர்படி, வருடத்தின் ஏழாவது மாதமான "திஷ்ரி" ல் 15ம் நாள் இயற்கை பொருட்களை கொண்டு குடில் அமைத்து தங்கியிருந்து அங்கே அவர்களது வணக்க வழிபாடுகளை நிறைவேற்றுவார்கள். 

அதில் சமாரிடன் எனும் ஒருவகை புராதன வழி யூதர்கள், மற்றவர்களை போல மஸ்ஜிதுன் அக்ஸாவிற்கு வருவதில்லை மாறாக அவர்கள் இடிக்கப்பட்ட பழைய சாலமன் கோவில் இருந்த டெம்பிள் மவுன்ட் எனப்படும் கெஸிரிம் மலைக்கு சென்று வருடத்தில் ஒருமுறை ஆடுகளை அறுத்து பலியிட்டு தங்களது புனித யாத்திரையை நிறைவு செய்வார்கள். 

இதில் ஆர்தடாக்ஸ், மெசானியக், செமிதிக் நியோபாகன்ஸ், அஸ்கனாஸி என இருக்கும் பல யூத பிரிவுகளுக்கு ஏற்ப ஒவ்வொன்றிலும் மாறுபாடு உண்டு. சிலர் ஹீப்ரு வேதங்களை ஏற்பதில்லை, யித்திஷ் மொழி வேதங்களையே கற்கின்றனர். 

0 கருத்துரைகள்:

Post a comment