Header Ads



கொரோனாவுடன் போராடுவதுடன் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் - பிரதமர்



போரை விடவும் கொவிட் வைரஸ் தொற்றினால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள அழிவு மிகவும் மோசமானது என பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 வைரஸினால் ஏற்பட்ட அழிவுகள் போர் அழிவுகளை விடவும் மிகவும் பாரதூரமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2015ம் ஆண்டின் பின்னர் பின்தள்ளப்பட்டுள்ள இந்த நாட்டை மீளக் கட்டியெழுப்பும் பொறுப்புடன் கொவிட்-19 அனர்த்தத்தையும் வெற்றிகொள்ள வேண்டிய சவால் ஏற்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடுகளில் பணியாற்றி வரும் இலங்கையர்களினால் கிடைக்கும் அந்நிய செலாவணி வருமானம் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

சுற்றுலாத்துறை, உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

பெரும் எண்ணிக்கையிலான மக்களின் வருமானம் இழக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்று நோயுடன் போராடுவதுடன் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.