Header Ads



அடக்கம் செய்ய அனுமதி வழங்க, துரித நடவடிக்கை அவசியம் - ஹக்கீம்


கோவிட் 19 தொற்றினால் இறக்கும் முஸ்லிம் சடலங்களை புதைக்க அனுமதிப்பது தொடர்பில் அரசாங்கம் துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி தெரிவித்தார். மருத்துவ கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகளை அங்கீகரிப்பது தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய அவர்,

அவசரப்படாமல் சிந்தித்து முடிவு எடுக்க வேண்டிய காலம் இது.

இடர் முகாமைத்துவ தேசிய கவுன்சிலை உடனடியாக அமைத்து எதிரணிக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும்.

நாடு பாரிய அனர்த்த நிலைக்கு முகங்கொடுத்துள்ளது. இறந்தவர்களை அடக்குவது தொடர்பான பிரச்சினை பாரதூரமான பிரச்சினையாக வளர்ந்துள்ளது.முஸ்லிம் மக்கள் மட்டுமன்றி கத்தோலிக்க மக்களுக்கும் இது தொடர்பில் பிரச்சினை உள்ளது.இதிலுள்ள விஞ்ஞானபூர்வமான அடிப்படையை உலக சுகாதார ஸ்தாபனம் கூறியுள்ளது. அமைச்சர் அலி சப்ரி எடுத்து வரும் நடவடிக்கை தொடர்பாகவும் பிரதமர் அதற்கு அளித்து வரும் ஒத்துழைப்பும் பற்றி எமக்கு தகவல் கிடைத்துள்ளது.

இது தொடர்பில் அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

ஷம்ஸ் பாஹிம், சுப்ரமணியம் நிசாந்தன்

3 comments:

  1. If the authority(who is responsible) dose not stop this inhuman act and human violation even at the dead bodies....

    We raise our hand toward the creator of this universe, the True ONE God of all human being on earth... Asking him with our tears that....

    May Allah punish those who forcefully pass laws and orders to burn Covid-dead Muslism's body.

    May Allah burn them live, those who enjoy the burning the muslims covid dead bodies. (in both worlds).

    Those muslims who are with government and supported government for 20... ACT quickly before the public make dua against to you all too...

    ReplyDelete
  2. This guy was mum all these days and joining the chorus now.

    ReplyDelete
  3. றஹீம் சார், மக்கள் பெற்றுதந்த MP பதவிகளின் வாக்குகளை பணத்துக்காக விற்று பிழைக்கும் ஒரு கட்சியின் தலைவர் நீங்கள்.
    எனவே உங்கள் கருத்துக்களை ஒருவரும் மதிக்கபோவதில்லை. ஏற்கவும் கூடாது.

    முதலில், அந்த துரோக MPகளை தக்க தண்டணை கொடுத்து விட்டு வாருங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.