Header Ads



விடுதலை செய்யப்பட்டார் பிள்ளையான்


தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மேல் நீதிமன்ற விசேட நீதிபதி டி.சூசைதாசன் முன்னிலையில் பிள்ளையான் உள்ளிட்ட சந்தேகநபர்கள் இன்று செவ்வாய்க்கிழமை முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இந்நிலையிலேயே சிவநேசதுரை சந்திரகாந்தனிற்கு இரண்டு சரீரப்பிணைகள் மற்றும் வெளிநாடு செல்லத்தடை ஆகிய நிபந்தனைகளுடன் பிணை வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி  மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.

குறித்த சம்பவம் தொடர்பாக கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்த ராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப்புலனாய்வு உத்தியோகஸ்தரான எம்.கலீல், முன்னாள் இராணுவ சிப்பாயான மதுசிங்க  ஆகியோர் சந்தேகத்தின் பேரில்  கடந்த 2015 ஆண்டு கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. இது பொது மக்களாகிய நாம் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட தீர்ப்பு.

    ReplyDelete

Powered by Blogger.