Header Ads



பிள்ளையான் ஏன் விடுதலை செய்யப்பட்டார்..? நாடாளுமன்றில் நீதியமைச்சரின் விளக்கம்


சமீபத்தைய நீதிமன்ற தீர்ப்புகள் குறித்து முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு நீதியமைச்சர் நாடாளுமன்றத்தில் பதிலளித்துள்ளார்.

முன்னாள் கிழக்குமாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டமை குறித்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளிற்கு நீதியமைச்சர் பதிலளித்துள்ளார்.

சிலர் வழங்கிய வாக்குமூலங்களின் அடிப்படையிலேயே பிள்ளையான் ஐந்து வருடங்கள் சிறையிலிருந்தார் எனநீதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வாக்குமூலம் சுயவிருப்பத்தின் அடிப்படையில் வழங்கப்படவில்லை என்பது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ள நீதியமைச்சர் பிள்ளையானிற்கு எதிராக இதன் காரணமாக எந்த ஆதாரங்களும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற நடவடிக்கைகளை விமர்சனம் செய்பவர்களை உண்மையை கண்டறியுமாறும்,நியாயமற்ற விமர்சனங்கள் மூலம சமூகத்தினை தவறாக வழிநடத்தவேண்டாம் எனவும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.

2 comments:

  1. இந்த அரசியலில் ஈடுபடுபவர்கள்,மனச்சாட்சிக்கு முரணாகவும் பேசுவதற்கு உந்தப்படுகின்றார்களா? இது தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டால் வழக்கு இலக்கத்தைக் கொடுத்து விபரங்களை நீதிமன்றம் மூலமாக அறிந்து கொள்ளுங்கள் எனக்கூறுவது தவறானதா?

    ReplyDelete
  2. நீதீ அமைச்சர் சார், பிள்ளையான் ஒரு கொலை குற்றவாளி என்பதாவது தெரியுமோ?
    நீங்க ஒரு டம்மீ பீஷூ, ஊது குழள்
    இதுவெல்லாம் ஒரு பிழைப்பு? ம்ம்...!

    ReplyDelete

Powered by Blogger.