Header Ads



ஏனைய நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், வைத்தியசாலை செல்வதற்கு அச்சப்பட தேவையில்லை


ஏனைய நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் கொவிட் குறித்த அச்சம் காரணமாக மருத்துவமனைகளுக்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளகூடாது என மருத்துவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தொற்றுநோயியல் பிரிவின் தலைமை அதிகாரி மருத்துவர் வைத்தியர் சுடத்சமரவீர இதனை தெரிவித்துள்ளார்.

சாதாரண நோயாளிகள் மருத்துவம பணியாளர்கள் கொவிட் நோயாளிகளுடனும் தொடர்புகொள்வதை தடுப்பதற்கான டிரையேஜ் என்ற நடைமுறையை பின்பற்றிவருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நடைமுறையின் மூலம் வெளிநோயாளர்கள் பிரிவிலேயே கொரோனா நோயாளர்களையும் நோய்அறிகுறிகள் உள்ளவர்களையும் அடையாளம் காணமுடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறான நோயாளிகள் உடனடியாக விசேட வோர்ட்களுக்கு அனுப்பப்படுவார்கள் என சுடத்சமரவீர தெரிவித்துள்ளார்.

இதன்காரணமாக ஏனையநோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்வதற்கு அச்சப்படக்கூடாது.கொவிட் நோயாளிகளிடமிருந்து பாதுகாப்பதற்கான விசேட திட்டங்கள் நடைமுறையில் உள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.