Header Ads



கொரோனாவினால் உயிரிழக்கும் முஸ்லீம்களின், உடல்களை தகனம் செய்வது மீள்பரிசீலனை – நீதியமைச்சர்


கொரோனா வைரசினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு அனுமதிக்கவேண்டும் என பல தரப்பினர் விடுத்துள்ள வேண்டுகோள்களை அரசாங்கம் ஆராய்ந்துவருகின்றது என நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசினால் உயிரிழந்த முஸ்லீம் மக்களின் உடல்களை தகனம் செய்யவேண்டாம் என இந்த வருட ஆரம்பத்தில் வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டன என அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

வைரசின் இயல்பு குறித்து தெரியாததாலும் கொவிட் 19 குறித்த நிச்சயமற்ற தன்மை காரணமாகவும் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டது எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்போது ஆறுமாத காலங்கள் முடிவடைந்துள்ள நிலையில் இது குறித்து மீள ஆராயப்படுவதாக நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசினால் உயிரிழந்த அனைவரினதும் உடல்களை தகனம் செய்வது என்பது குறித்த முடிவை அரசாங்கம் தற்போது மறுபரிசீலனைக்கு உட்படுத்தியுள்ளது என நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. உடல்களை தகனம் செய்யும் சுகாதார பிரிவின் முடிவுக்கு அரசாங்கம் ஒருபோது தலையிடாது என்று ஜனாதிபதியும் பிரதமரும் கூறிவிட்டார்களே...

    அப்படியாயின் சுகாதார பிரிவின் முடிவை அறைகள் மாற்றி விட்டார்களா அல்லது முன்பு அவர்கள் பொய்யை தான் கூறினார்களா?

    தற்போது அரசாங்கம் மீள் பரிசீலனை செய்வதன்பது சுகாதார பிரிவின் முடிவையும் அரசாங்கத்தால் மாற்றி யமைக்க முடியும் என்பதை காட்டுகிறது.

    தற்போது அடக்கம் செய்ய அனுமதித்தாலும் ஏற்கனவே எரித்த ஜனாஸாக்களின் உறவினர்கள் எதை எப்படி ஜீரணிப்பார்கள்.

    ReplyDelete
  2. இனியும் முஸ்லிம் சமூகம் அமைச்சர் அலி சப்ரியை புரிந்து கொண்டு தமது ஆதரவினை
    அவருக்கு வழங்குவார்கள் என நினைக்கின்றேன்

    ReplyDelete

Powered by Blogger.