Header Ads



அமெரிக்காவின் புதிய அதிபர் யாரென்பது எமக்கு முக்கியமல்ல, எங்கள் நாடு தலை வணங்காது


அமெரிக்காவின் புதிய அதிபராகும் வாய்ப்பு ஜோ பைடனுக்கு பிரகாசமாக இருக்கும் நிலையில், ஈரான் மறைமுகமாக எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியுள்ளது.

அமெரிக்க அதிபரான டிரம், ஈரானுடன் கடந்த 4 வருடங்களாக மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். இதன் காரணமாக அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது, அதுமட்டுமின்றி பொருளாதார தடைகளை விதிப்பது என்று இருந்தார்.

இதனால் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.

இந்நிலையில், தற்போது நடைபெற்று முடிந்துள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜோ பைடனின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

இவர் அமெரிக்காவின் அடுத்த அதிபராக உள்ளார்.

இந்நிலையில், ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி, மூன்று வருட அனுபவம் அமெரிக்காவுக்கு நல்ல பாடத்தைக் கொடுத்திருக்கும் என்று நம்புகிறேன். எங்கள் மக்கள் பொருளாதார ரீதியான தீவிரவாதத்தை மூன்று வருடங்களாக அனுபவித்திருக்கிறார்கள்.

பொருளாதாரத் தடைகளால் ஈரான் அமெரிக்காவுக்குத் தலை வணங்காது என்ற பாடத்தை அமெரிக்காவில் அடுத்துவரும் அரசு நிர்வாகம் கற்றிருக்கும் என்று நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னர், ஈரான் மூத்த தலைவர் அயத்துல்லா அலி காமெனி, அமெரிக்காவுடனான எங்கள் கொள்கை எப்போதும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். எந்தத் தனிப்பட்ட நபரைச் சார்ந்தும் மாறாது. அமெரிக்க அதிபராக யார் வருகிறார்கள், யார் போகிறார்கள் என்பது முக்கியம் அல்ல என்று தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

No comments

Powered by Blogger.