Header Ads





வைத்தியசாலைகளுக்கு வருகை தரும் நோயாளர்களை பொறுப்பேற்க மறுப்பு தெரிவிக்கும் சுகாதார ஊழியர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நோயாளர்கள் அவ்வாறு திருப்பியனுப்பப்படும் பட்சத்தில் அது குறித்து அறிவிக்குமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

அவ்வாறான நிலைமைகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ​ஹேரத் தெரிவித்துள்ளார்.

சுகயீனமடைந்தோர் மற்றும் திடீர் சுகயீனமடைவோரை அருகிலுள்ள வைத்தியசாலைகளுக்கு அழைத்து செல்லுமாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார வழிகாட்டல்களுக்கமைய முகக்கவசம் அணிவது கட்டாயமாகும் எனவும் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ​ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.

1 comment:

  1. Complaint to whom? It applicable for private hospitals also?

    ReplyDelete

Powered by Blogger.