November 23, 2020

ஸஹ்ரான் போன்றவர்களை உருவாக்கும் அரபு, பாடசாலைகளை அழிக்கவே ஜனாதிபதி ஆட்சிக்கு வந்தார் - விமல்


(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

ஸஹ்ரான் போன்றவர்களை தண்டிப்பது மட்டுமல்ல அவர்களை உருவாக்கும் அரபு பாடசாலைகள், மதரஸாக்களையும் முழுமையாக அழிக்கவே ஜனாதிபதி ஆட்சிக்கு வந்தார்,

ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை வெளிவந்தவுடன் உடனடியாக இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விமல் வீரவன்ச சபையில் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (23) திங்கட்கிழமை இடம்பெற்ற 2021 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அதிகாரத்துக்கு கீழ் செயற்படும் நிறுவனங்ளுக்கான நிதி ஒதுக்கீட்டு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,

ஜனாதிபதி – பிரதமரின் தலைமைத்துவம் நாட்டின் யுத்தத்தை வெற்றிகொண்டதை போலவே இன்று நாட்டின் சவால்களை வெற்றிகொள்ளவும் எதுவாக அமைந்துள்ளது.

விடுதலைப் புலிகளின் நினைவேந்தலைக் கோரி சுமந்திரன் வழக்கொன்றில் ஆஜரானார். ஆனால் அவர்களின் சட்ட தர்க்கங்கள் அனைத்துமே நிராகரிக்கப்பட்டு சட்டம் நிலைநாட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதியை அதிகாரத்துக்கு கொண்டுவந்த மக்கள், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றவாளிகளை எப்போது தண்டிப்பார்கள் என எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர், அதேபோல் ஸஹ்ரான் போன்றவர்களை உருவாக்க காரணமானவர்களையும், அரபுப் பாடசாலைகள், மதரஸா பாடசாலைகள் என்ற பெயரில் ஸஹ்ரான் போன்றவர்களை உருவாக்க காரணமான நபர்களையும் தண்டிக்க வேண்டும்.

பெளத்த, கிறிஸ்தவ அறநெறி பாடசாலைகளில் ஏனைய மதத்தவரை கொலை செய்ய வேண்டும் என கற்பிப்பதில்லை, இந்து அறநெறி பாடசாலைகளில் இவ்வாறு ஏனைய மதத்தவரை கொலைசெய், கழுத்தை வெட்டு என கற்பிப்பதில்லை. விடுதலைப் புலிகள் பயங்கரவாதம் இருந்தபோதும் அதற்கும் இந்து ஆலயங்களுக்கும் எந்த தொடர்பும் இருந்ததில்லை. ஆனால் இந்த விடயத்தில் அவ்வாறு அல்ல, மத நடவடிக்கைகளில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கின்றனர்.

அரபு பாடசாலை என்ற பெயரிலும், மதரஸா என்ற பெயரிலும் எதனைன் கற்பிக்கின்றனர் என எவருக்கும் தெரிவதில்லை. எனவே, ஸஹ்ரான் போன்றவர்களை தண்டிப்பது மட்டுமல்ல அவர்களை உருவாக்கும் இவ்வாறான மத செயற்பாடுகளையும் முழுமையாக அழிக்கவே ஜனாதிபதி ஆட்சிக்கு வந்தார்  என்றார்.

12 கருத்துரைகள்:

Insha allah everything will be fine.hasbunnallahu wanihmal wakeel.May allah give your all hidayath like sahahaba.

இந்த நாடு பௌத்தர்களுக்கு மட்டுமே சொந்தமானதா? இஸ்லாமியர்கள் தங்களது உரிமைகளையும் மார்க்கத்தையும் இழந்து தான் இங்கு வாழவேண்டுமா? ஒரே இறைவனை நம்மபிக்கை கொண்டதால் தான் முஸ்லிம்களுக்கு இவ்வளவு சோதனைகளா? யா அல்லாஹ் உனது மார்க்கத்தை சீரழிப்பவர்களுக்கு உரிய நேரத்தில் தண்டனையை வழங்கிவிடு. இலங்கை முஸ்லிம்கள் மிகவும் நல்லவர்கள். அவர்களை சோதித்து விடாதே. ஆமீன்!!

மாப்புள்ள! உங்களுக்கு என்றால் இன்ஷா அல்லாஹ் அல்லாஹ்வின் தண்டனை மிகவும் சீக்கிரம் வருவதற்கு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கின்றேன்.

As Usual, Rubbish from the Big Mouth. The last paragraph says it all. He claims:

'No one knows what is being taught in Arabic schools and Madrasahs.'

But, the rest of his speech is full of claims that Arabic schools and Madrasahs teach Terrorism and produce Terrorists. How does he know that if no one knows what is being taught there as stated in the last paragraph.

Fact is, this guy Only knows to talk CRAP.

Severe punishment awaits for him from
Allah, the Almighty! He’s too much.

இவர்களுடன் இருக்கும் முஸ்லிம் m.p.,களே
சந்தோஷமாக இருங்கள்..
அவர்கள் தரும் அபிவிருத்திகளை வாங்குவதுதான் உங்கள் அவா...
எமக்கான உரிமை இல்லாத நேரம் எதுக்கய்யா அபிவிருத்தி..
நீங்கள் கூட முழு எமது சமுதாயத்தின் சாபத்துக்கு ஆளாகி விட்டீர்கள்...
உங்கள் காலம் மிகவும் அண்மையில்..

Which place tought for those who burned Ampara, Beruwala, Digana, Kurunagala, who killed innocent peaople in Digana, Kurunegala and during JVP terrorism..... may be this.... forgot the heads without bodies all over the roads during his mother home JVP terrorism.... big jock...with white shirt now. !!!!

இவனுக்கு அழிவு நெருங்கிட்டு

எப்படி இருந்தாலும், முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதட்கு அங்கேயே பதிலளித்திருக்க வேண்டும். அப்போது அந்த கருதும் பதிவு செய்யப்பட்டிருக்கும்.

வருடா வருடம் புதுசு புதுசா குரைக்கும் ஊளை குரல்கள் மட்டும் தான் வேறு.. இது எல்லாம் எழுதியவர்கள் உனது கையில் கொடுத்து விட்டு அவர்கள் இப்போது அரசியல் சண்டையில் இருக்கிறார்கள்.

பௌத்தத்தை பாதுக்காக்க தானே அவர் ஜனாதிபதியாக வந்ததாக அறிந்தோம். மற்ற இனங்களை இல்லாதொழிக்க வந்ததாக உங்கள் மூல அறிய முடிகிறது.இதை ஜனாதிபதி அவர்கள் தங்கள் வாயால் சொல்லட்டும்.

Post a comment