Header Ads



இஸ்லாமிய தீவிரவாதத்துடன் மாத்திரமே எனது யுத்தம், இஸ்லாத்துடன் இல்லை - இஸ்லாமியர்களை இழிவுபடுத்தும் செயலை பிரெஞ்சு அரசு ஒருபோதும் அனுமதிக்காது


பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான், இஸ்லாமிய தீவிரவாதத்துடன் மாத்திரமே எனது யுத்தம். மாறாக இஸ்லாம் மதத்துடன் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில் கடந்த சில நாட்களாக நடக்கும் சம்பவம் கவலையளிக்கும் வகையில் உள்ளன.

ஏனெனில், முகமது நபியின் (sallalahu alaihi wassalam) கேலிச்சித்திரங்களை காட்டியதற்காக ஆசியர் சாமுவேல் பாடி என்பவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யபட்டார்.

ஆசிரியரின் இறுதிச்சடங்கில் பேசிய இமானுவல் மேக்ரான், கேலிச்சித்திரக் கலாச்சாரம் தொடரும், அது தங்கள் பேச்சுரிமை, உணர்வுகளை வெளிப்படுத்தும் உரிமை என்று கூற, பல இஸ்லாமிய நாடுகள் மேக்ரானின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தன.

அதுமட்டுமின்றி ஊடகம் ஒன்றில் பிரான்ஸ் பிரெஞ்சு இஸ்லாமியர்களை இழிவு படுத்துவதாக குறிப்பிட்டிருந்தது.

இது குறித்து ஜனாதிபதி மேக்ரான் அளித்துள்ள விளக்கத்தில், பிரெஞ்சு இஸ்லாமியர்களை இழிவு படுத்தும் செயலை அரசு ஒரு போதும் அனுமதிக்காது. எங்கள் யுத்தம் எல்லாம் இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு எதிரானதே தவிர, இஸ்லாம் மதத்துக்கு எதிரானது இல்லை என்று தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் பிரான்சில் இஸ்லாம் அசுர வளர்ச்சி கண்டு வருகின்றது. கிட்டத்தட்ட 1 கோடியை நெருங்கும் முஸ்லிம்களின் சனத்தொகை ஐரோப்பா நாடுகளிலையே அதிக முஸ்லிம்கள் வாழும் நாடாகியுள்ளது. நீங்கள் முஸ்லிம் நாடுகளை ஆக்கிரமித்தீர்கள் ஆனால் இறைவன் உங்களிடமிருந்து ஐரோப்பாவை பறிக்கப்போகின்றான்

    ReplyDelete

Powered by Blogger.