Header Ads



கொரோனாவை இலங்கையால் கட்டுப்படுத்த முடியும் - பிரதமர் மகிந்தவிடம் உலக வங்கி தெரிவிப்பு


கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுவரும் அனைத்து நடவடிக்கைகளையும் உலக வங்கி பாராட்டியுள்ளது.

மேலும், இவ்வங்கியின் மாலைதீவு, நேபாளம் மற்றும் இலங்கைக்கான வதிவிடப் பணிப்பாளர் பாரிஸ் ஹேய்டட் சர்வோஸ் நேற்றுமாலை (03.11.2020) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து, பேச்சுவார்த்தையொன்றை மேற்கொண்டுள்ளார். 

அதில் அவர் கூறியதாவது,

இலங்கையும் - உலக வங்கியும் பல வருடங்களாக பரஸ்பர நம்பிக்கையுடன் செயற்பட்டு வருவதாக தெரிவித்தார்.

அத்தோடு, தற்போதைய தொற்றுப் பரவலை விரைவில் கட்டுப்படுத்த இலங்கையால் முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்குத் தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக உலக வங்கி உறுதியளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.