Header Ads



ஜனவரியில் அமைச்சரவையில் மாற்றம்..? பசிலை சகோதரர்கள் சம்மதிக்கச்செய்தனர் - வீரசேகரவிற்கும் பதவி

2021 ஜனவரியில் அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

20வது திருத்தம் ஜனாதிபதி அமைச்சரவை பொறுப்புகளை தன்வசம் வைத்திருப்பதற்கு அனுமதித்துள்ளதன் காரணமாக பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப விவகாரங்களை ஜனாதிபதி தன்வசம் வைத்திருப்பார்.

தற்போது இராஜாங்க அமைச்சராகவுள்ள சரத்வீரசேகர சட்டஒழுங்கு விவகாரங்களிற்கான அமைச்சராக பதவி உயர்த்தப்படுவார்.

பொலிஸ்திணைக்களம் சிவில் பாதுகாப்பு திணைக்களம் போன்றவை சட்டம் ஒழுங்கு அமைச்சின் கீழ் காணப்படும்.

பசில் ராஜபக்சவின் நாடாளுமன்ற பிரவேசம் ஜனவரியில் இடம்பெறும் என தெரிவித்துள்ள அரசியல் வட்டாரங்கள் ஜனவரியில் இடம்பெறவுள்ள அமைச்சரவை மாற்றத்தின் போது பசில் ராஜபக்சவும் அமைச்சரவையில் உள்வாங்கப்படுவார் என தெரிவித்துள்ளன.

இந்த வாரம் பசில்ராஜபக்சவை சம்மதிக்கவைப்பதற்கான முயற்சியில் ஜனாதிபதியும், பிரதமரும் ஈடுபட்டனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமல் ராஜபக்ச தனது இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனது பணிச்சுமையை குறைப்பதற்காக இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதற்கான தனது விருப்பத்தை அவர் ஜனாதிபதியிடம் வெளியிட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் அவர் தொடர்ந்தும் நீர்ப்பாசனதுறை அமைச்சராக பதவி வகிப்பார்.

இதற்கான அனுமதியை அவர் ஜனாதிபதியிடமிருந்து பெற்றுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் சமல்ராஜபக்ச தனது இராஜினாமா கடிதத்தை கையளித்துள்ளாரா என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை

1 comment:

  1. குடு்ம்ப அங்கத்தவர்களுக்கு உரிய பதவியும் அதிகாரமும் வழங்கி, பொது மக்களின் கருத்துச் சுதந்திரத்தை முழுமையாக அடக்கி தொடர்ந்தும் அவதானித்து தடுககும் வகையில் வலையமைப்பை உருவாக்கி களவும், போதைவஸ்தும், பொதுச் சொத்துக்களைச் சூறையாடலும், நாட்டின் சொத்தக்களை விற்று தனது சொந்த பைகளை நிரப்பவும் வாய்ப்பான சட்டங்களை உருவாக்கி நவீன சமுதாயத்தை நோக்கிய பயணத்தை இனி ஆவலோடு எதிர்பார்க்கலாம்.அதுவே புதிய அரசாங்கத்தின் இலக்கும், குறிக்கோளுமாகும்.

    ReplyDelete

Powered by Blogger.