Header Ads



எனது மருமகன் ஆஜராவதில்லை - ஹக்கீம் வெளியிட்டுள்ள விளக்கம்


கொவிட் - 19 வைரஸ் தொற்றால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் தகனம் செய்யப்படுவதற்கு எதிராக உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பான விசாரணைகளில் தனது மருமகன் சட்டத்தரணி மில்ஹான் முஹம்மத் ஆஜராவதில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். 

இடையீட்டு மனுதாரர் ஒருவரின் சார்பில் ஆஜராகும் ஜனாதிபதி சட்டத்தரணி, சன்ஜீவ ஜயவர்தனவுடன் வழமையாக உதவியாளராகப் பணியாற்றும் நிலையில், அவர் சுயதனிமைப்படுத்தலில் இருப்பது பற்றி அறிவிப்பதற்காகச் சென்ற சக சட்டத்தரணியொருவரோடு, கடந்த வியாழக்கிழமை  அவர் நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளார். 

அதை தவிர, தனது சமூகத்தையும், சமயத்தையும் பாதிக்கக் கூடிய பிரஸ்தாப வழக்கில் தாம் ஆஜராவதில்லை என்பதில் சட்டத்தரணி மில்ஹான் முஹம்மத் உறுதியாக இருக்கிறார். 

அத்துடன், ஜனாஸாக்களுக்கு எரியூட்டும் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக தாம் தொடர்ந்தும் கடுமையான நிலைப்பாட்டிலிருப்பதால், முஸ்லிம் காங்கிரஸ் தலைமையின் மீது கொண்டுள்ள காழ்ப்புணர்;ச்சியின் விளைவாக, இதன் உண்மைத் தன்மைப் பற்றிய போதிய புரிதலின்றி, சிலரால் இந்த விவகாரம் பூதாகரமாக்கப்பட்டுள்ளமை வருந்தத்தக்கது என கட்சியின் தலைவர் குறிப்பிட்டதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஊடகப் பிரிவு விளக்கமளித்துள்ளது. 

 

5 comments:

  1. All 22 Muslim politicians must take responsibility for pathetic condition of Muslim community today ..
    They will be asked in front of Allah .
    They play politics with Muslim community.
    They fool Muslim public how long they will do this ??

    ReplyDelete
  2. காலாவதியாகிப் போன தலைவரின் காலாவதியாகிப் போன அறிக்கை

    ReplyDelete
  3. நீங்கள் கண்டியில் எந்த அபிவிருத்தியும் செய்ததில்லை. ஆனாலும் மக்கள் உங்களுக்கு வாக்களிப்பதன் நோக்கம் உங்கள் இராஜதந்திர அறிவை பயன்படுத்தி எங்கெங்கு எதை செய்ய முடியுமோ அதை எமது சமூகத்துக்கு சிறப்பாக செய்வதாலேயே.
    இந்த ஙிடயத்தில் உங்களுக்கு நேரடி சம்பந்தமில்லாவிட்டாலும். அவரை கண்டித்து இதன் பிறகு இப்படியான கீழ்த்தரமான வேலைகளில் ஈடுபடாமலிருக்க கூடியவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

    ReplyDelete
  4. EN MARUMAKAN AJARAVATHILLAI!
    AAJARAKAVILLAI !!!
    IRANDUM VEVERU KARUTHUKKAL.

    ReplyDelete
  5. why? He couldn't find any other seniors to practice, other than these racists?

    ReplyDelete

Powered by Blogger.