Header Ads



வெளிநாடுகளில் புலிகளுக்கு நிதி, சேகரிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை - சரத்வீரசேகர


வெளிநாடுகளில், விடுதலைப்புலிகளிற்கு நிதிசேகரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்பவர்களை கண்டுபிடித்து நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர சிலோன் டுடேயிற்கு தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டில் விடுதலைப்புலிகளிற்கு நிதி சேகரிப்பவர்களை கண்டுபிடிப்பதற்காக இன்டர்போல், சிஐடி மற்றும் புலனாய்வு பிரிவினரின் உதவிகளை பெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் விடுதலைப்புலிகளிற்கு பலர் நிதி சேகரிக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இது சட்டவிரோதமானது என்பதால் நாங்கள் இன்டர்போலின்உதவியை நாடவுள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று குறிப்பிட்ட நாடுகளின் உதவியையும் பெறவுள்ளோம் என தெரிவித்துள்ள அவர் இவ்வாறு விடுதலைப்புலிகளிற்கு நிதி திரட்டுபவர்கள் இலங்கையில் வாழும் அவர்களது சகாக்கள் குறித்த தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கைகளில் புலனாய்வு பிரிவினரும் சிஐடியினரும் ஏற்கனவே ஈடுபட்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தகவல்கள் எதிர்காலத்தில் மிகவும் பயன் அளிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னைய அரசாங்கம் இவர்கள் குறித்து எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை இதனால் இந்த வலையமைப்பு விரிவடைந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

4 comments:

  1. வெளிநாடுகளே உதவப்போகின்றன அப்போது என்ன செய்யப்போவதாக உத்தேசம்.

    ReplyDelete
  2. நாடு பொருளாதார ரீதியில் அழிவில் சென்று கொண்டு இருக்கின்றன அதை மீட்ட தான் உளக நாடுகள் அயராது உழைத்து மீள பார்க்கிறார்கள் ஆனால் இலங்கையில் துவேஷ வேலைகளும் இன்னும் பழிவாங்கல்களும் உச்சக்கட்டத்தில் சென்று கொண்டு இருக்கின்றன.

    ReplyDelete

Powered by Blogger.