Header Ads



சாம்பலாகிப்போன உரிமை


உரிமைகள் சாம்பலாகிப்போன போதும்

உறவுகளை  சாம்பலாக்கி

உள்ளங்கையில் தந்தபோதும்

தட்டிக்கேட்டும் பெறமுடியாமல்

தடவிக்கேட்டும் பெறமுடியாமல்

தத்தளிக்கும் என் சமூகமே...

 

எங்கு தவறு நடந்தது

இப்படியொரு தண்டனை எமக்கு...

நம்பிக்கைக்கு பாத்திரம் என பேரெடுத்த என் சமூகம்

தற்போது துரோகிகளாய் சித்தரிக்கப்படும் அவல நிலை...

 

சிவில் சமூகமாய் பெற வேண்டிய பல உரிமைகளை

அரசியலுக்குள் அடிபட்டு

அனைத்தையும் அடகு வைத்தோம்...

 

இருக்கும் இடத்திலே இருந்து கொண்டு

நம்பிக்கையை கட்டியெழுப்பாமல்

அங்கும் இங்கும் தாவித்திரிந்து

அனைவரினது நம்பிக்கையையும் இழந்து விட்டோம்...

 

இறுதியில் கோமணம் அற்ற சமூகமாய் நிற்கிறோம்

இழப்பதற்கு இதற்கும் மேல் என்ன இருக்கின்றது.

 

இறைவா அனைத்தையும் உன்னிடமே பொறுப்பு சாற்றியவனாக

அரசனுக்கெல்லாம் அரசன் நீயே

நீதிபதிகளுக்கெல்லாம் நீதிபதியே

இறுதித்தீர்ப்பு உன்னிடமே...

 

-தன்ஸீம் செய்யது முகம்மது.

No comments

Powered by Blogger.