Header Ads



இஸ்லாத்தையும் அதன் இறைதூதரையும் கேவலப்படுத்தும் கேலிச்சித்திரங்களை நியாயப்படுத்தியமைக்கான விலையை செலுத்திக் கொண்டிருக்கும் பிரான்ஸ்


- லத்தீப் பாரூக் -

பேச்சு சுதந்திரம் என்ற போர்வையில் இஸ்லாத்துக்கும் அதன் இறைதூதருக்கும் எதிரான கேலிச் சித்திரங்களை நியாயப்படுத்தியதன் விளைவுகளை பிரான்ஸ் இப்போது அனுபவிக்கத் தொடங்கி உள்ளது போல் தெரிகின்றது. பிரான்ஸ் அரசாங்கத்தின் இஸ்லாத்துக்கு விரோதான போக்கின் காரணமாக முஸ்லிம் நாடுகளில் அதன் உற்பத்திகள் மக்களால் பகிஷ்கரிக்கப்பட்டு வருகின்றன. இதன் பாதிப்புக்களை பிரான்ஸ் கம்பனிகள் தற்போது உணரத் தொடங்கி உள்ளன.

ஏண்ணெய் வளம் மிக்க வளைகுடா நாடுகளில் பிரான்ஸ் உற்பத்திகளை மக்கள் புறக்கணித்து வருகின்றனர். இந்த பகிஷ்கரிப்புக்களை கைவிடுமாறு கிட்டத்தட்ட கெஞ்சும் அளவுக்கு பிரான்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதி எமானுவல் மக்ரோன் இஸ்லாத்தை கேவலப்படுத்தும் கேலிச்சித்திரங்களை நியாயப்படுத்தும் வகையில் தான் இந்தக் கோரிக்கைகள் அமைந்துள்ளன.

கடந்த அக்டோபர் மாதம் 16ம் திகதி பிரன்ஸ் பாடசாலை ஒன்றின் வரலாற்று ஆசிரியர் சாமுவல் படி தனது வகுப்பறையில் இஸ்லாத்தின் இறைதூதர் முஹம்மது நபி அவர்களைக் கேவலப்படுத்தும வகையில் கேலிச்சித்திரங்களை காட்சிப்படுத்தியமைக்காக ஆத்திரமடைந்த 18 வயதான அப்துல்லாஹ் அன்ஸரோவ் என்ற மாணவன் அந்த ஆசிரியரின் தலையைக் கொய்து கொலை செய்தான் பதிலுக்கு அவனை பிரான்ஸ் பொலிஸார் சுட்டுக் கொன்றனர்.

அதன் பிறகு அந்த சம்பவத்தை கண்டிக்கும் வகையில் பிரான்ஸ் ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்கள் அவர் பயன்படுத்திய வார்த்தைப் பிரயோகங்கள் என்பன தான் பின்னர் மிகப் பெரும் சர்ச்சையை உருவாக்கின. எமது எதிர்காலத்தை இஸ்லாமியர்கள் பறிக்க நினைக்கின்றார்கள் அதனால் தான் ஆசிரியர் கொல்லப்பட்டார். ஆனால் பிரான்ஸ் அதற்கு ஒரு போதும் இடம் கொடுக்காது. நாம் எமது கேலிச்சித்திரங்களை கைவிடப் போவதும் இல்லை. இன்று உலகம் முழுவதும் ஒரு பிரச்சினைக்குரிய மார்க்கமாகவே இஸ்லாம் இருக்கின்றது. இது எமது நாட்டில் மட்டும் நாம் காணும் ஒரு விடயம் அல்ல என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த விடயம் தொடர்பாக பிரான்ஸுக்கும் துருக்கிக்கும் இடையில் கடும் வார்த்தைப் பிரயோகங்கள் மூண்டன. துருக்கி ஜனாதிபதி தையிப் எர்டொகானின் கருத்துக்களுக்கு அவரது பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து பெரும் வரவேற்பு கிட்டியது. மேலைத்தேச நாடுகள் மீண்டும் சிலுவைப்போர் ஒன்றை ஆரம்பிக்கும் வகையில் நடந்து கொள்வதாக துருக்கிப் பிரதமர் குற்றம் சாட்டினார். இறைதூதரை எதிர்க்கும் விடயத்தில் அந்த சக்திகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பதை துருக்கி தனக்குக் கிடைத்த கௌரவமாகக் கருதுவதாக எர்டொகன் தெரிவித்தார்.

ஐரோப்பியா நோக்கிய மக்களின் குடிபெயர்வு பற்றி விரிவாக ஆராய்ந்து வரும் ஊடகவியலாளரும் எழுத்தாளருhன ஹுஷாம் ஷாகிர் பிரான்ஸ் உலகளாவிய ரீதியில் அதன் நற்பெயரை இழந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். தற்போது அது ஆத்திரமூட்டும் செயற்பாடுகளிலும் வெறுப்புணர்வைத் தூண்டும் செயற்பாடுகளிலும் ஒழுக்க ரீதியாக வெற்கக் கேடான செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வருவதால் உலகில் பிரான்ஸுக்கு இருந்த நற்பெயரும் மரியாதயும் குறையத் தொடங்கி உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேச்சு சுதந்திரம் என்ற போர்வையில் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான கருத்துக்கள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்த வெற்கக் கேடான செயற்பாடானது முழு ஐரோப்பாவினதும் நாகரிக உலகினதும் மானத்தையே வாங்கி வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 தவக்கல் கர்மான்

சுமாதானத்துக்கான நோபல் பரிசை வென்ற தவக்கல் கர்மான் 'இஸ்லாத்துக்கு எதிரான மெக்ரோனின் தாக்குதல் சகிப்புத்தன்மை அற்ற ஒரு நிலையையே விளக்குகின்றது. பிரான்ஸ் போன்ற ஒரு நாட்டின் தலைவரைப் பொறுத்தமட்டில் இது மிகவும் வெற்கக் கேடானதாகும் என்று குறிப்பிட்டுள்ளார். இஸ்லாம் பற்றி மரியாதயாகவும் ஏற்றுக் கொள்ளத் தக்க வகையிலும் கருத்துக்களை முன்வைக்குமாறு அவர் மெக்ரோனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மாறாக தனது நாட்டு பிரஜைகள் இஸ்லாத்தைப் பின்பற்றுகின்றார்கள் என்பதற்காக இவர்கள் மீது வீண் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் வகையில் பேச வேண்டாம் என்றும் அவர் கேட்டுள்ளார். மெக்ரோன் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுக்கத்தக்க ஏற்றுக் கொள்ள முடியாத பொறுப்பற்ற உரைகளை நிகழ்த்தி உள்ளார். தனக்கு வாக்களிக்கும் வெறித்தனம் கொண்ட ஒரு குழுவை திருப்தி படுத்துவதற்காக அவர் இவ்வாறான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்' என்று குறிப்பிட்டுள்ளார்.

உண்மையான சர்ச்சை என்பது இஸ்லாத்தில் காணப்படவில்லை. அது பிரான்ஸ் அரசியலில் தான் காணப்படுகின்றது. அங்கு அரசியல் பித்தலாட்டம் புரிய நினைப்பவர்கள் முஹம்மது நபியை தமது கருப் பொருளாக எடுத்துக் கொள்வது தான் வேதனையானது. 1500 வருடங்களுக்கு மந்திய முஹம்மது நபியின் போதனைகள் சமாதானத்தையும், நீதியையும், நியாயத்தையும், சமத்துவத்தையும் கருப் பொருளாகக் கொண்டவை. ஆனால் இவற்றில் இருந்தெல்லாம் ஏற்கனவே தூர விலகி நிற்கும் மெக்ரோன் போன்றவர்கள் ஒரு அரசியல்வாதியாக ஏற்கனவே தோற்றுப் போனவர்கள். பிரான்ஸ் மக்களை சமய ரீதியாகவோ அல்லது வேறு வகையிலோ ஒருவரில் இருந்து மற்றவரை பிளவு படுத்தி அவர் படுகுழியில் தள்ளி உள்ளார். வெகு விரைவில் சர்ச்சைக்குரிய பிhன்ஸ் பத்திரிகையான சார்ளி ஹெப்டோவும் இதை நன்கு புரிந்து கொள்ளும். 

ஆமினா இஸத் தாஸ்

ஐக்கிய இராச்சியத்தின் லீ கெஸ்டர் டி மொன்போர்ட் பல்கலைக் கழகத்தில் அரசியல் துறை விரிவுiயாளரான ஆமினா இஸத் தாஸ் பிரான்ஸின் தாராளப்போக்கு, சமத்துவம், சகோதரத்துவம் என்பன அதன் எட்டு வீத முஸ்லிம் சனத்தொகை மீது பிரயோகிக்கப்படவில்லை. அங்குள்ள முஸ்லிம்கள் பிரான்ஸின் ஆபிரிக்க காலணித்துவ நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்டவர்களின் மூன்றாவது மற்றும் நான்காவது தலைமுறையாக வாழ்ந்து வருபவர்கள். இந்த மக்கள் பிரான்ஸ் நடத்திய யுத்தங்களில் போராட கொண்ட வரப்பட்டவர்களே தவிர பிhன்ஸின் வீட்டு எஜமானர்களுக்கு சேவகம் புரிய கொண்டு வரப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.

உதாரணத்துக்கு கடந்த வாரம் பிரான்ஸின் ஈபிள் கோபுர பகுதிக்கு அருகில் தலையில் முக்காட்டுடன் நடமாடிய இரண்டு முஸ்லிம் பெண்கள் இன்னும் இரண்டு பிரான்ஸ் பெண்களால் மோசமாகத் தாக்கப்பட்டு கத்தியால் குத்தப்பட்டுள்ளனர். அந்த முஸ்லிம் பெண்களை நோக்கி அசிங்கமான அரபிகளே இந்த நாடு உங்களுக்கு வீடல்ல என்று கூச்சலிட்டவாறு பலவந்தமாக அந்தப் பெண்களின் முக்காட்டை கிழித்தெறிந்த தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பிரான்ஸில் இது மாதிரியான தாக்குதல் சம்பவங்கள் இன்று வழமையாகி விட்டன. மேலும் இந்தச் சம்பவம் ஊடகங்களில் கூட பெரிது படுத்தப்படவில்லை. புல ஊடகங்கள் இதை கண்டு கொள்ளவே இல்லை என்றும் சர்வதேச அவதானிப்பாளர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர். இஸ்லாத்துக்கு எதிரான பிரசாரங்களில் மூழ்கிப் போயுள்ள பிரான்ஸ் ஊடகங்கள் இதை கண்டு கொள்ளவே இல்லை.

இவ்வாறான இக்கட்டான ஒரு பின்னணியில் பிரான்ஸில் இருந்து பல முஸ்லிம்கள் தற்போது வெளியேறத் தொடங்கி உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. இதனால் முஸ்லிம் மூலைசாலிகளின் வெளியேற்றத்தால் ஏற்படப் போகும் பிரச்சினையை பிரான்ஸ் அனுபவிக்கத் தொடங்கி உள்ளது. 'நான் எனது நாட்டை நேசிக்கின்றேன். ஆனால் ஒரு முஸ்லிமாக இருப்பதற்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டு எஞ்சிய எனது வாழ்நாளை இங்கு கழிக்க நான் தயாராக இல்லை. ஏங்கு எனக்கு மரியாதை கிடைக்கின்றதோ அங்கு நான் வாழ்ந்து கொள்வேன்' என்று கூறிக் கொண்டு தான் பிரான்ஸ் முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரான்ஸ் முன்னொரு போதும் இல்லாத அளவுக்கு இனவாத நாடாக மாறி உள்ளது. 1960 களில் அவர்கள் அரபிகளை ஷீன் நதியில் தூக்கி வீசினார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா. அது நினைவு  ள்ளதா என்று ஒரு பத்தி எழுத்தாளர் கேள்வி எழுப்பி உள்ளார். அல்ஜீரியாவின் சுதந்திரத்துக்கு எதிராக பிரான்ஸ் தொடுத்த யுத்தத்துக்கு எதிராக பாரிஸ் நகர வீதிகளில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை அடக்க பிரான்ஸ் எடுத்த நடவடிக்கையையே அவர் இவ்வாறு நினைவு கூர்ந்துள்ளார். (முற்றும்)


1 comment:

  1. இது france க்கு மட்டுமல்ல, அனைத்து ஐரோப்பிய நாடுகளுக்கும் நல்ல பாடம், எனிமேலாவது இவர்கள் திருந்துவார்களா?. முஸ்லிம்கள் இந்த நாடுகளுக்கு வருவதை தடைசெய்வார்களா?

    ReplyDelete

Powered by Blogger.