Header Ads



ஈரானின் அணுவாயுத விஞ்ஞானியை, இஸ்ரேல் வேட்டையாடியது எப்படி..? பரபரப்பு தகவல்கள் வெளியாகின


தமிழில் TL

ஈரானின் அணுவாயுத திட்டங்களிற்கான தலைவர் என கருதப்படும் விஞ்ஞானி மொஹ்சென் பாக்ரிஜடே படுகொலை செய்யப்பட்டமை உலகம் முழுவதும் எதிரொலித்துக்கொண்டிருக்கின்ற நிலையில் அவர் படுகொலை செய்யப்பட்ட விதம் குறித்த பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

62 பேர் கொண்ட குழுவினரே இந்த படுகொலையை முன்னெடுத்தனர் என ஈரானில் கொரோனா வைரசின் தீவிரத்தை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் முகமது அஹ்வாஸ் தெரிவித்துள்ளார்.

ஈரானிலிருந்து கசிந்த தகவல்களை தான் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானிய அதிகாரிகள் இஸ்ரேலின் மொசாட்டின் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளனர்.

இஸ்ரேலே இந்த தாக்குதலை மேற்கொண்டது என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என நியுயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

வெளிநாட்டில் பாதுகாப்பு துறை மற்றும் புலனாய்வு துறையினர் மூலம் மிகவும் உயர்தர பயிற்சிகள் வழங்கப்பட்ட 12 பேர் கொண்ட குழுவொன்று ஈரானின் தலைநகரிலிருந்து கிழக்கே ஐம்பது கிலோமீற்றர் தொலைவில் உள்ள அப்ஸார்ட் நகரில் காத்திருந்தது என பத்திரிகையாளர் முகமது அஹ்வாஸ் தெரிவித்துள்ளார்.

அது சுமார் பத்தாயிரம் பேர் வாழும் மலைப்பகுதி – கொலை செய்யப்பட்ட விஞ்ஞானிக்கு அங்கு மாளிகையொன்று காணப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் 50 பேர் இந்த கொலைக்கு அவசியமான விநியோக நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.

மொஹ்சென் பாக்ரிஜடே டெஹ்ரானிலிருந்து அங்கு வரவுள்ளார் என்பது அவர்களிற்கு தெரிந்திருந்தது அவர்கள் அவரது வருகையை அவதானித்தவந்தமிருந்தனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அந்த நகரத்திற்கான நுழைவாசலில் உள்ள சுற்றுவட்டமொன்றில் அவர்கள் விஞ்ஞானியை கொலை செய்வதற்கு திட்டமிட்டுள்ளனர்.

ஒரு ஹ_ண்டாய் சான்ட பே நான்கு பேருடன் காத்திருந்தது,நான்கு மோட்டார் சைக்கிள்களும் இரண்டு சினைப்பர்களும் ஈரானின் அணுவாயுத திட்டங்களிற்கான தலைவரின் வருகைக்காக காத்திருந்தனர்.

இதனை தவிர நிசான் வாகனமொன்றும் காத்திருந்தது.அந்த வாகனத்தில் குண்டு பொருத்தப்பட்டிருந்தது.

எதிர்பார்க்கப்பட்டதற்கு அரை மணித்தியாலம் முன்னதாகவே வாகனத்தொடரணி அந்த பகுதிக்கு வந்தது.அந்த வாகனத்தொடரணியில் குண்டு துளைக்காத மூன்று வாகனங்கள் காணப்பட்டன.

அந்த வாகனங்கள் வந்ததும் அந்த பகுதிக்கான மின்சாரம் உடனடியாக துண்டிக்கப்பட்டது என பத்திரிகையாளர் அஹ்வசே தெரிவித்துள்ளார்.

முதல் கார் அந்த சுற்றுவட்டத்தை கடந்து சென்றதும் அவர்கள் தாக்குதல் அணியினர் தயராகிவிட்டனர்.

மூன்றாவது கார் அந்த சுற்றுவட்டத்தை கடந்து சென்றதும் நிசான் வெடித்துள்ளது.இதனால் அந்த பகுதியில் காணப்பட்ட மின்சார கம்பங்கள சிதறுண்டன என தொலைக்காட்சிகள் தெரிவித்துள்ளன.

வெடித்தகுண்டு மிகவும் சக்திவாய்ந்தது சிதறல்கள் 300 மீற்றர் வரை காணப்பட்டன என ஈரானின் அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

பயணித்துக்கொண்டிருந்த இரண்டாவது கார் நெருங்கி வந்ததும் அந்த காரின் மீது இரண்டு சினைப்பர் வீரர்கள் அடங்கிய 12 பேர் கொண்ட குழுவினர் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

கார்கள் மீது துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றதும் அந்த பகுதியில் சில நிமிடங்கள் கடும் துப்பாக்கி மோதல் இடம்பெற்றுள்ளது என ஈரானின் புரட்சிகர இராணுவத்துடன் தொடர்புடைய சமூக ஊடக அலைவரிசையொன்று தெரிவித்துள்ளது.

அந்த கொலையாளிகள் குழுவின் தலைவர் விஞ்ஞானியை காரிலிருந்து வெளியே இழுத்து சுட்டுக்கொன்றார் – விஞ்ஞானி கொலை செய்யபப்படுவதை உறுதி செய்வதற்காக அவ்வாறு அவர் செயற்பட்டார் என ஈரானிய தகவல்கள் தெரிவிக்கின்றன என பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.

சேதம் எதனையும் சந்திக்காத அந்த குழுவினர் பின்னர் அங்கிருந்து மாயமாக மறைந்துவிட்டனர் என ஈரான் பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.

விஞ்ஞானியின் மெய்பாதுகாவலர்கள் திருப்பி தாக்கியதால் உண்டான துப்பாக்கி சத்தத்தை தாங்கள் கேட்டதாகவும் பாரிய வெடிப்பு சத்தத்தை கேட்டதாகவும் அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

2 comments:

  1. This is how the Zionist Media reported this incident

    ReplyDelete
  2. its shame on Iran? how an external group of assassinates/extremists with all freedom could achieve their tasks?

    ReplyDelete

Powered by Blogger.