Header Ads



அல்ஹைதாவின் முக்கிய தளபதியையும், ஒசாமாவின் மருமகளையும் இஸ்ரேல் வேட்டையாடியது - ஈரானில் சம்பவம்


- நியுயோர்க் டைம்ஸ் -

அல்ஹைதாவின் முக்கிய தளபதி அபுமுகமட் அல் மஸ்ரியை ஈரானில் அமெரிக்காவிற்காக இஸ்ரேலிய புலனாய்வு பிரிவினர் சுட்டுக்கொன்றமை குறித்த பரபரப்பு தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

ஆகஸ்டில் இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து தற்போதே தகவல்கள் வெளியாகியுள்ளன.

22 வருடங்களிற்கு முன்னர் கென்யா தான்சானியாவில் அமெரிக்க தூதரகங்களின் மீது அல்ஹைதா மேற்கொண்ட தாக்குதலில் 225 பேர் கொல்லப்பட்டனர்.

அந்த தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியான அல்மஸ்ரியைஅமெரிக்காவிற்காக இஸ்ரேலின் விசேட பிரிவினர் ஈரானில் இரகசியமாக கொலை செய்துள்ளனர்.

நியுயோர்க் டைம்ஸ் இதனை தெரிவித்துள்ளது.

இது குறித்து நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளதாவது

இந்த கொலையில் அமெரிக்காவிற்கு என்ன தொடர்புள்ளது என்பது தெரியவில்லை ஆனால் பல வருடங்களாக ஈரானில் உள்ள அல்குவைதா தலைவர்களை அமெரிக்கா கண்காணித்து வருகின்றது.

அவரது மரணம் இதுவரை அறிவி;க்கப்படாததாக காணப்படுகின்றது.

இந்த துப்பாக்கி பிரயோகம் குறித்து செய்தி வெளியிட்டிருந்த ஈரானிய ஊடகங்கள் ஹபீப் டாவுட் என்ற லெபான் பேராசிரியரும் அவரது 27 வயது மகளும்; சுட்டுக்கொல்லப்பட்டனர் என தெரிவித்திருந்தார்.

எனினும் அவ்வாறான பேராசிரியர் எவரும் இல்லை என்பது முக்கியமானது.

தாங்கள் அல்ஹைதா உறுப்பினர் ஒருவருக்கு அடைக்கலம் அளித்ததை மறைப்பதற்காக ஈரானிய அதிகாரிகள் போலி தகவல்களை வெளியிட்டுள்ளனர்.


ஆகஸ்ட் ஏழாம் திகதி 58 வயது அல் மஸ்ரி தனது வெள்ளை நிற வாகனத்தில் தனது மகள் மிரியத்துடன் பயணித்துக்கொண்டிருந்தவேளை நால்வர் காரை நிறுத்தி சைலன்சர் பிஸ்டலால் துப்பாக்கி பிரயோகம் செய்தனர்.

இதன் காரணமாக அவரும் மகளும் கொல்லப்பட்டனர். அவரதுமகள் ஒசாமா பின் லாடனின் மகன் ஹம்சாவின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.


ஹம்சா ஏற்கனவே கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலைக்கு எந்த நாடும் பொறுப்பேற்கவில்லை அல்ஹைதாவும் இந்த உயிரிழப்பு குறித்து அறிவிக்கவில்லை.

அல்ஹைதாவின் தற்போதைய தலைவர் அய்மன் அல் ஜவஹிரிக்கு பின்னர் அந்த அமைப்பின் தலைவராக வருவார் என கருதப்பட்டவர் அல் மஸ்ரி .

ஆப்பிரிக்க நாடுகளில் அமெரிக்க தூதரங்களின் மீது 1990களில் இடம்பெற்ற தாக்குதல்கள் தொடர்பில் இவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்ததுடன் எபிஐயின் பட்டியலில் இவர் இடம்பெற்றிருந்தார்.

கென்யாவில் 2002 இல் இடம்பெற்ற தாக்குதலின் முக்கிய சூத்திரதாரி இவரே இந்த தாக்குதலில் இஸ்ரேலை சேர்ந்த மூன்று சுற்றுலாப்பயணிகள் உட்பட 15 பேர் கொல்லப்பட்டனர்.

2008 இல் அமெரிக்காவின் பயங்கரவாதம் குறித்த தேசிய மத்திய நிலையம் இவரை திட்டமிடுவதில் வல்லவர் மிகச்சிறந்த அனுபவசாலி என வர்ணித்திருந்தது.

அல்ஹைதாவின் மிகவும் இரகசியமான முகாமைத்துவ பேரவையின் உறுப்பினரான இவர் செப்டம்பர் 11 தாக்குதலின் பின்னர் ஈரானிற்கு தப்பியோடினார்.

அங்கு அவரை அமெரிக்காவால் கண்டுபிடிக்க முடியாது என அவர்கள் கருதினார்கள் என பயங்கரவாதம் குறித்த ஆய்வாளார் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஈரான் அரசாங்கம் தங்களை காட்டிக்கொடுக்காது எனவும் அவர்கள் நம்பினார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

2003 இல் இவரை ஈரான் கைதுசெய்திருந்தது, எனினும் யேமனில் அல்ஹைதாவினால் கைதுசெய்யப்பட்ட ஈரானிய இராஜதந்திரியை விடுதலை செய்வதற்காக இவரையும் மேலும் நால்வரையும் ஈரான் விடுதலை செய்திருந்தது.

ஓசாமாபின்லேடனின் மகன் ஹம்சாவை உருவாக்கியவரும் இவரே.

1 comment:

  1. Why this much details for this news???? They all are same & all are terrorists let them kill each other and die.... better avoid these type of news....

    ReplyDelete

Powered by Blogger.