ஹோமாகம வைத்தியசாலையில், கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நபருக்கு கொரேனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த நபர் ஒரு குழுவுடனான மோதலில் கத்திக்குத்துக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது இவருக்கு சத்திர சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனையடுத்து இவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையிலேயே கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன் இவருக்கு சிகிச்சையளித்த வைத்தியர்கள் உட்பட 10 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
1 கருத்துரைகள்:
Ridiculous
Post a comment