Header Ads



அடக்கம் செய்ய அனுமதி தரவேண்டுமென்ற கோரிக்கையை வரவேற்கிறேன், மன்னார் என்ன சுடுகாடா..?


கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணிப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு மன்னர் என்ன சுடுகாடா என பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் பகிரங்கமாகக் கேள்வியெழுப்பினார். 

மன்னாரில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (22) காலை ஊடக சந்திப்பொன்று நடைபெற்றது. 

இதன்போது, கெரரோனா வைரஸ் தொற்றில் மரணிப்பவர்களின் சடலங்களை, மன்னாரில் அடக்கம் செய்வது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளிக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார். 

அவர் மேலும் கருத்துரைக்கையில், “கொரோனா வைரஸ் பல நாடுகளில் அழிவுகளை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையிலும் அதனுடைய தாக்கம் தற்போது மிகத் தீவிரமாக அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.

“இந்த சூழ்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றால் மரணிக்கின்ற தங்களுடைய மதத்தைச் சேர்ந்தவர்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி தரவேண்டுமென்ற இஸ்லாமிய மதத் தலைவர்களது கோரிக்கையை நான்  வரவேற்கிறேன். அவர்களுடைய மதம் சார்ந்த நம்பிக்கைக்கு, சுகாதார அமைச்சின்  ஆலோசனையைப் பெற்று, அதைச் செய்வதை நான் வரவேற்கின்றேக்.

“ஆனால், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றில் மரணிக்கின்ற அனைத்து முஸ்லிம் உறவுகளினுடைய  ஜனாஸாக்களை, மன்னார் மாவட்டத்தில் அடக்கம் செய்வதற்கு ஒரு யோசனை முன்வைத்ததாக அறிகின்றேன். பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் கேட்க விரும்புகின்றேன், மன்னர் என்ன சுடுகாடா? 

“கடல் இருக்கின்ற பிரதேசத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என்றால் இலங்கையை சுற்றி எல்லா இடமும் கடல்தான் இருக்கின்றது. அந்தந்த மாவட்டங்களில் இறக்கின்றவர்களை அவர்களுடைய  மாவட்டத்தில் ஒரு பொதுவான இடத்தில் அடக்கம் செய்வது தான் முறை.

“ஆனால், ஏனைய மாவட்டங்களில் மரணிக்கின்றவர்களையும் மன்னார் மாவட்டத்தில் அடக்கம் செய்வதை மன்னார் மாவட்ட மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அது ஒரு நியாயமான செயலும் அல்ல” என்றார். 

3 comments:

  1. Charles sir, Good question
    ஏன் முஸ்லிம்கள் தமது சொந்த இடங்களில் அடக்கம் செய்யுமாறு கேட்க பயப்படுகிறார்கள்?,

    ReplyDelete
  2. இறந்தோரை அடக்கம் செய்வதுதானே கிறிஸ்தவர்களின் மரபு. இந்த விடயத்தில் நீங்கள் பலமாக குரல் எழுப்பவில்லயே,ஏன்? உங்கள் உரிமைகளைத் தாரை வார்த்துத் தகனம் செய்துவிட்டீர்களா?

    ReplyDelete
  3. மன்னாரில் புதைக்கலாம் என்றால் , எங்கும் புதைக்கலாம் என்பது எனது கருது. வறண்ட பிரதேசம் என்றால் மன்னர் மட்டுமல்ல , அம்பாந்தோட்டையும் வறண்ட பிரதேசம்தான். தீவு என்றால் , நிறைய தீவுகள் இருக்கின்றன. அதட்குரிய சரியான காரணத்தை அரசு வெளிப்படுத்தினால் நல்லது. இல்லாவிட்ட்தால் மக்கள் எதிர்ப்பை தவிர்க்க முடியாது.

    ReplyDelete

Powered by Blogger.